
சிம்பு நடிப்பில் அவரது 45 வது படமாக உருவாகி வரும் ‘மாநாடு’ படத்தை அரசியல் மற்றும் கமர்ஷியல் கலந்து வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக கல்யாணி பிரியதர்சன் நடித்துள்ளார். இவர்களுடன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், மனோஜ் கே.பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.இப்படத்தை ரம்ஜானை முன்னிட்டு வரும் மே மாதத்தில்வெளியிட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.இந்த படத்தில் சிம்பு முதல் முறையாக அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞர் வேடத்தில் நடித்துள்ளார். இதனால் இஸ்லாமிய பண்டிகையான ரம்ஜான் தினத்தில் படத்தை வெளியிட்டால் அது படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என நம்புகிறதாம் படக்குழு.












