கிரிக்கெட் வீரர் பும்ராவுடன்-அனுபமா பரமேஸ்வரன் திருமணமா?
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் பிரேமம். இப்படத்தின் மூலம் நடிகைகளாக அறிமுகமான சாய் பல்லவி, மடோனா சபாஸ்டின், அனுபமா பரமேஷ்வரன் ஆகியோருக்கு மலையாள திரையுலகைத் தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்கள் .இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இப் படத்தில் நடித்த அனுபமா பரமேஷ்வரன்,-மற்றும் கிரிக்கெட் வீரர் பும்ரா இருவரும் காதலிப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வந்தது. தற்போது அந்த வதந்தி உருமாறி,அனுபமா மற்றும் பும்ரா இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக வைரலாகி வருகிறது. இது குறித்து அனுபமா பரமேஸ்வரனின் அம்மா தற்போது மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், “அனுபமா பற்றி எல்லோரும் மறக்கத் தொடங்கும்போது ஒரு புதிய கதை தோன்றும். நாங்கள் இது போன்ற வதந்திகளை நேர்மறை அர்த்தத்தில் மட்டுமே எடுத்துகொள்கிறோம்.
Related Posts
அனுபமா, பும்ராவை தொடர்புபடுத்தி பல கதைகள் முன்பே வந்தன. இந்த கதைகளுக்கு பிறகு இன்ஸ்டா கிராமில் கூட இருவரும் பின் தொடர்வதில்லை என்று நினைக்கிறேன். ஒருமுறை பும்ரா, அனுபமா படப்பிடிப்புக்காக சென்ற அதே ஓட்டலில் பும்ரா தங்கியிருந்தார்.அப்போதுதான் அவர்கள் இருவரும் முதன் முதலாக ஒருவரை ஒருவர் சந்தித்தனர். ஏன் இப்படி ஒரு கதை இப்போது பரவி வருகிறது என்று புரியவில்லை.
தெலுங்கில் ‘கார்த்திகேயா 2’ படத்தின் படப்பிடிப்புக்காக தான் ராஜ்கோட்டுக்கு சென்றிருந்தார் அனுபமா” என்று கூறியுள்ளார்.