இந்த கூத்தை எங்கே போய் சொல்வது என்று திருமங்கலம் தொகுதி மக்கள் சிரிப்பாய் சிரிக்கிறார்கள்.
தேர்தல் வாக்குறுதிகள் எல்லையை கடந்து எங்கோ போய்விட்டது. சில அமைச்சர்களின் பேச்சு அவர்களுக்கே ஆப்பாக அமைந்துவிடுவதுதான் இதில் இருக்கிற வேடிக்கை.!
“திமுக ஆட்சியில் கலைஞர் கொடுத்த டிவி தற்போது நன்றாக ஓடிக் கொண்டிருப்பதைக் காட்டினால் நான் லட்ச ரூபாய் தருகிறேன்” என்பதாக எதோ ஒரு ப்ளோவில் பேசிவிட்டார் அமைச்சர் ஜெயக்குமார் .
இதுதான் சில தொகுதிகளில் சிக்கலை தந்து இருக்கிறது.
ஓட்டு கேட்டுக்கொண்டிருந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திடீரென ஒரு வீட்டுக்குள் நுழைந்துவிட்டார் திருமங்கலம் தொகுதியில்.!
சம்மணம் போட்டு உட்கார்ந்தவர் டீ கேட்டு குடித்தார். அப்போது வீட்டுக்குள் கலைஞர் டிவி ஓடிக்கொண்டிருந்தது. அதை அவசரம் அவசரமாக அணைத்து விட்டு கவனத்தை வேறு பக்கம் திருப்பிவிட்டார்கள்.
வீட்டை விட்டு வெளியே வந்ததும், ஆர்.பி. உதயகுமாரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பிடித்துக் கொண்டார்கள்
“நீங்கள் கட்டிய தடுப்பணை ஒரே மாதத்தில் உடைந்து போகுது. அம்மா மினி கிளினிக், திறப்புவிழா அன்றே இடியிது .ஆனாலும், எங்கள் வீட்டில் 14 வருடமாக கலைஞரின் இலவச வண்ண தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருக்கிறது. அமைச்சர் ஜெயக்குமாரை இந்த பக்கம் அனுப்பி வையுங்க… வரும் போது மறக்காம லட்சக்கணக்கில் பணத்தையும் கொண்டு வரச் சொல்லுங்க.. நிறைய வீடுகளில் இன்னமும் கலைஞர் தொலைக்காட்சி ஓடிக்கிட்டு இருக்கு”என்று சொன்னார்களாம்.
முக அழகிரியின் மேற்பார்வையில் வழங்கப்பட்ட டி.வி. அது.
( படம் :dailyhunt.)