‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடிகை நமீதாவுடன் நடனம் ஆடிய வானதி சீனிவாசன்!


கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அங்குள்ள மக்களுடன் கலந்து வாக்கிங் செல்வது, நடைப்பயிற்சி, ஆட்டோவில் பயணம், மீன் மார்க்கெட்,டீக்கடை என அவர்களுடன் நெருங்கி பழகி ஓட்டு வேட்டையாடி வருகிறார்.இவருக்கு அங்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.இந்நிலையில் இவரை எதிர்த்து போட்டியிடும் பாரதிய ஜனதா சார்பில் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், கமல் பாணியிலேயே ஆட்டோ பயணம் ,மீன் மார்க்கெட்என பயணித்து ஒட்டு வேட்டையாடி வருகிறார். இன்று அவரை ஆதரித்து வேனில்  நடிகை நமீதா பிரசாரம் மேற்கொண்டார்.  அப்போது வேனின் முன்பாக அவரது கட்சியினர் ஏற்பாடு செய்த இளைஞர்கள் நடிகர் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடியபடியே சென்று கொண்டிருந்தனர். இதைப்பார்த்த நமீதா வானதி சீனிவாசனை வேனில் இருந்து இறக்கி வாத்திகம்மிங் பாடலுக்கு சில நிமிடங்கள் நடனம் ஆடினார். அவர் ஆடிய நடன வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.