கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்ட கனிமொழி எம்.பி. கவசஉடை பாதுகாப்புடன் ஓட்டு போட்டார்

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று  நடந்தது.இத் தேர்தலில்  பொதுமக்கள், திரை உலக பிரபலங்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் என பலரும் காலை முதலே உற்சாகத்துடன் வந்து  வாக்களித்தனர். மாலை 6 மணிவரை நடந்த வாக்குப்பதிவைத்தொடர்ந்து, அடுத்த ஒரு மணி நேரம்,அதாவது 7 மணி வரை  கொரோனா பாதித்த நோயாளிகள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

சமீபத்தில் தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில்  ஈடுபட்ட  கனிமொழி எம்பிக்கு  தொற்று உறுதி  செய்யப்பட்டதையடுத்து அவர்  தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். இந்த நிலையில் இன்று மாலை கனிமொழி எம்பி சென்னை மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில்  கொரோனா பாதுகாப்பு உடையான பிபிசி கிட் அணிந்து வந்து வாக்களித்தார். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.