
ஒவ்வொரு தொகுதியிலும் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டு,தேர்தலில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் அனைவரும் தோல்வியைத் தழுவினர்.இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளராக இருந்த கமீலா நாசர் கட்சியில் இருந்து வெளியேறினார். `குடும்பச் சூழல் காரணமாக விலகுகிறேன்’ என அவர் கூறியிருந்தாலும், `விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட சீட்டை எதிர்பார்த்தார். அந்தத் தொகுதியை கவிஞர் சிநேகனுக்கு ஒதுக்கியதால் அதிருப்தியடைந்து வெளியேறினார்’ எனவும் தகவல் வெளியானது. தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்தின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரனும் கட்சியில் இருந்து வெளியேறினார். மேலும், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தில் ஜனநாயகம் இல்லை என முக்கிய நிர்வாகிகள் சந்தோஷ் பாபு,பத்மபிரியா என அடுத்தடுத்து விலகினர் இந்நிலையில்,மக்கள் நீதி மய்ய த்தின் பொதுச் செயலாளர் திருவெறும்பூரில் போட்டியிட்ட முருகானந்தம் இன்று திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் அவர் விலகுவதாக அறிவித்தார் .இது மக்கள் நீதிமய்யம் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.