பூம்பூம் மாட்டுக்காரரை வலைவீசி தேடும் ஜி.வி.பிரகாஷ்!
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் , இளம் முன்னணி கதாநாயகர்களின் பட்டியலிலும் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளவர். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர் உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.மேலும்வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடித்துவரும் வாடிவாசல்,மற்றும் கார்த்திக் நரேனின் இயக்கத்தில் உருவாகும் தனுஷின் 43வது படத்துக்கும் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் நெட்டிசன் ஒருவர், வீடுவீடாக சென்று மிகவும் நேர்த்தியாக நாதஸ்வரம் வாசித்து யாசகம் பெறும் பூம்பூம் மாட்டுக்காரரின் வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில்வெளியிட்டு, ‘இவரது வாசிப்பையும், இருக்கும் நிலைமையையும் பாருங்கள்’ நல்லதோர் வீணை செய்தே…என பதிவிட்டு இருந்தார்.
சமூக வலைத்தளங்களில் வைரலான இவ் வீடியோவை பார்த்த ஜி.வி.பிரகாஷ், அந்த வீடியோவையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ,’ இந்த நபரை கண்டுபிடிக்க முடிந்தால், நாம் அவரை பாடல் பதிவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். வாசிப்பு குறிப்புகள் மிக திறமையாகவும், துல்லியமாகவும் இருக்கின்றன ‘ என குறிப்பிட்டுள்ளார்.
Related Posts
If we could find this person . We could use him for recordings . So talented and good precision on the notes … talented https://t.co/79LcQrrZpj
— G.V.Prakash Kumar (@gvprakash) May 22, 2021