
நடிகை ஜெயந்தி இறந்த தகவலை அவரின் மகன் கிருஷ்ண குமார் உறுதி செய்துள்ளார்.அவரின் மரண செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
1960ம் ஆண்டு திரையுலகிற்கு வந்தவர் ’80’கள் வரை முன்னணி நடிகையாக கோலோச்சியவர் நடிகை ஜெயந்தி. இருவர் உள்ளம், அன்னை இல்லம், படகோட்டி, கர்ணன், எதிர் நீச்சல், நீர்க்குமிழி, இரு கோடுகள், பாமா விஜயம், புன்னகை, நில் கவனி காதலி உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தனது சிறந்த நடிப்புக்காக 7 முறை கர்நாடக மாநில விருதுகளை வென்றுள்ளார்.இரு கோடுகள் படத்தில் வந்த புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மணிக்காக பாடல், வெள்ளி விழா படத்தில் வந்த காதோடு தான் நான் பாடுவேன் ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலமானவை.வயதான பிறகு ஜெயந்தி பல படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படங்கள் தவிர்த்து வசந்தம் என்கிற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வந்த ஜெயந்தி கடந்த 38ஆண்டுகளாக ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தநிலையில், இன்று காலை பெங்களுருவில் உள்ள அவரது வீட்டில் காலமானார். நடிகை ஜெயந்தி இறந்த தகவலை அவரின் மகன் கிருஷ்ண குமார் உறுதி செய்துள்ளார்.அவரின் மரண செய்தி அறிந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.