காதல்எப்.எம்., குச்சி ஐஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் பிரகாஷ் தற்போது உலகம்மை என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.
இதில் ’96’ படத்தில் திரிஷாவின் சிறிய வயது தோற்றத்தில் நடித்த கெளரி கிஷன்.முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வெற்றி மித்ரன் கதாநாயகனாக நடிக்க உடன் மாரிமுத்து, ஜி.எம்.சுந்தர், பிரனவ், அருள்மணி, காந்தராஜ், ஜெயந்திமாலா, அனிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
1970ல் நடைபெற்ற சாதிய பிரச்சனையை மய்யமாக கொண்டு நெல்லையில் நடக்கும் கதை “உலகம்மை”. பிரபல எழுத்தாளர் சு.சமுத்திரம் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்படும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.