சற்குணம் இயக்கத்தில், ராஜ்கிரண் அதர்வா!
சற்குணம் இயக்கத்தில், ராஜ்கிரண் அதர்வா முரளி மற்றும் ஆஷிகா ரங்கநாத் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு இன்று (ஆகஸ்ட் 4, 2021) காலை தஞ்சாவூரில் தொடங்கியது.இப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக 50 நாட்களில் முடிக்க, படக்குழு முடிவு செய்துள்ளது.
இந்த திரைப்படம், முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகிறது. இதில் ராஜ் கிரண், ராதிகா சரத்குமார், ஜேபி, R.K. சுரேஷ், சிங்கம் புலி, கன்னட நடிகர் ரவி காலே, சத்ரு, பால சரவணன், ராஜ் அய்யப்பா, G.M. குமார் மற்றும் பல முன்னணி நடிகர்கள் உட்பட ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடிக்கிறது.