கமல்ஹாசனின் ‘சபாஷ் நாயுடு’ திரைப்படம் கடந்த மே 16ஆம் தேதி அமெரிக்காவில் படப்பிடிப்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது . ஆனால் தமிழக சட்டமன்றத் தேர்தலில் கமல் வாக்களிக்க வேண்டியிருந்ததால் அன்றைய அமெரிக்க பயணம் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.இதன் காரணமாக ஒரு வாரத்திற்கு படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்
இதையடுத்து கமல்ஹாசன் இன்று அல்லது நாளை அமெரிக்க செல்லவிருப்பதாகவும் இவ்வார இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தின் முதல்காட்சியே சண்டைக்காட்சி தானாம்! இயக்குனர் ராஜீவ் குமார், கமல்ஹாசனும் பிரம்மானந்தமும் வில்லன் கோஷ்டியுடன் மோதும் இந்த சண்டைக்காட்சியை நகைசுவையாக படமாக்க திட்டமிட்டுள்ளாராம் .












