மிஸ் தெலங்கானா 2018.
எம்.பி.ஏ .படித்திருக்கிறார். மிஸ் இந்தியா இறுதிப்போட்டிக்கு தேர்வாகி இருந்தார்.
இவரை யாரோ சிலர் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். காமாட்சியை மூக்கில் குத்தி ,குருதி கொட்டச்செய்த அந்த கொடியவர்கள் யார்?
அந்த தெலங்கானா அழகியைப் பற்றி தற்போது பரபரப்பான செய்தி.!
தூக்கிட்டுக் கொள்வதை போன்ற வீடியோவை வெளியிட்டு விட்டு அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார். சமூக வலை தளங்களில் வைரலாகிவந்த அந்த வீடியோவை பார்த்த நட்பு வட்டம் உடனடியாக ஹைதராபாத் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்து விட்டது.
ஹிதாயத் நகருக்குப் பறந்து சென்ற காவல் படையினர் அந்த அழகியை காப்பாற்றி விட்டார்கள்.தற்போது மருத்துவமனையில் இருக்கிறார் .
தற்கொலை முயற்சிக்கான காரணம் என்னவாம்?
பாலியல் துன்புறுத்தல்.! வன்முறை !