
ரஜினிக்கு கழுத்தில் சிறிய கீறல் ஏற்படுத்தி ரத்தக்குழாயில் செல்கிற அடைப்பினை சரி செய்திருக்கிறார்கள்.
இதற்கு லோக்கல் அனஸ்தீசியா கொடுத்தால் போதுமானது .மூளைக்கு செல்கிற ரத்தக் குழாயில் அடைப்பு இருக்கிற இடத்தை கண்டறிந்து கழுத்துப்பகுதியில் அந்த இடம் மட்டும் மரத்துபோக செய்வதையே லோக்கல் அனஸ்தீசியா என்பார்கள்.அடைப்பினை நீக்கிய பிறகு மருத்துவ மனையில் சிலநாட்கள் இருக்க வேண்டும்.அடைப்பு சிறு அளவில்தான் இருக்கும். சொத்தைப் பல்லில் புழு மாதிரியான ஒரு பொருளை அகற்றுவார்கள்.அதைப்போலத்தான் இதுவும் இருக்கும்.
வீடு திரும்பிய பின்னர் கண்டிப்பாக பிஸிக்கல் ஆக்டிவிட்டீஸ் குறைத்துக்கொள்ளப்பட வேண்டும்.முன்னைப்போல வேகமாக கழுத்தை ஆட்டவோ ,திருப்பவோ கூடாது.நடிகர்கள் சண்டைக்காட்சிகளில் ஈடுபடுவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம்.
ரஜினிக்கு அத்தகைய கீறல்தான் நடந்து சிகிச்சை முடிந்திருக்கிறது.
இவரால் தொடர்ந்து நடிக்க முடியுமா?
சிக்கல் அங்கேதான் வரலாம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
ஹைதராபாத்தில் ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதே அப்பலோ மருத்துவமனை டாக்டர்கள் இது குறித்து எச்சரிக்கை செய்ததாக சொல்லப்படுகிறது. நடிப்பதை குறைத்துக்கொள்ளும்படி அட்வைஸ் செய்திருக்கிறார்கள்.
தற்போது அவரது ஆக்சன் காட்சிகள் முன்னைப்போல எடுக்கப்படுவதில்லை. ஒரு காட்சி எடுக்கப்பட்ட மறுவினாடியே அருகில் இருக்கிற நாற்காலியில் அமர்ந்து விடுவாராம்.
அரசியலுக்கு அவர் செல்லாததற்கும் இதுதான் முக்கிய காரணம்.அரசியல் காரணமாக மக்களை சந்திக்க செல்லும் இடங்களில் போதிய மருத்துவ வசதி இருக்கும் என்பதாக சொல்லமுடியாது.
தற்போது ஏற்பட்டிருந்த நடுக்கமோ ,தலை சுற்றலோ அரசியல் பயணங்களில் ஏற்பட்டிருந்தால் அனாசின் மாத்திரை தீர்வாக இருக்க முடியாது.
அவர் அரசியலில் இறங்காதது அறிவார்ந்த செயல் !
இதைப்போல நடிக்காமல் இருப்பாரா?அது அவரது மனைவி லதா ரஜினியிடம்தான் இருக்கிறது.












