‘தல’ அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வரும் ஜனவரி மாதம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.அதற்குள் குறுகிய கால தயாரிப்பில் இதே கூட்டணியில் உருவாகும் புதிய படத்தையும் முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் உலக சுற்றுலா செல்ல தயாராகி வருகிறார்.
அதற்கு பயிற்சி நடவடிக்கையாக தற்போது,வட இந்தியாவில் நீண்ட பைக் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மேலும் வலிமை அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களை குஷிப்படுத்த தற்போது அடிக்கடி வலிமை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் அஜித்தின் புகைப்படங்களும் அடிக்கடி சமூக வலைதளங்களில் தயாரிப்பு தரப்பு மற்றும் அஜித் தரப்பினரால் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அஜித்துடன் அவரது ரசிகர்களால் ‘குட்டி தல’ என பெயர் சூட்டப்பட்ட ஆத்விக் தந்தையைப்போல் ஹெல்மெட் உடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.