நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பினார்!
நடிகர் ரஜினிகாந்திற்கு தலை சுற்றல், மயக்கம் ஏற்பட்டு கடந்த வியாழக்கிழமை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூன்றாவது நாளாக 5-வது தளத்தில் உள்ள சிறப்பு வார்டில் வைத்து மருத்துவ குழு சிகிச்சை அளித்து வந்தனர்.
மருத்துவ வல்லுனர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில், கழுத்து பகுதி வழியாக மூளை மற்றும் முகம், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து அவரது உடல்நிலை நன்றாக உள்ளதாகவும், ஒரு சில தினங்களில் அவர் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இந்நிலையில்,தற்போது ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் வீடு திரும்பிய ரஜினிகாந்த் ‘ஹூட் ஆப்’செயலி மூலம் தன் குரல் பதிவில் கூறியுள்ளதாவது, “அனைவருக்கும் வணக்கம் சிகிச்சை முடிந்தது. நான் நல்லா இருக்கேன்.இன்னிக்கு நைட் தான் நான் வீட்டுக்கு வந்தேன்.என்னோட ஆரோக்கியத்துக்காக பிரார்த்தனை செய்த எல்லா நல்ல உள்ளம் கொண்ட ரசிக பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.மற்றும் என் நலம் பற்றி விசாரித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.”இவ்வாறு அவர் கூறியுள்ளார்.