நடிகை பூனம் பாண்டேவுக்கு அடி,உதை! கணவன் அதிரடி கைது !!
பாலிவுட் நடிகை பூனம் பாண்டே சாம் பாம்பே என்பவரை கடந்த வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் மும்பை புறநகர்ப் பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை திடீரென இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். சாம் , பூனம் பாண்டேவை தலை, முகம், கண் உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார். அதில், பூனம் பாண்டே ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பூனம் பாண்டே தன் கணவர் மீது அளித்த புகாரின் அடிப்படையில் மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்து அவர் கணவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.ஏற்கனவே திருமணமான புதிதில் இருவரும் கோவாவுக்குச் சென்ற போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, சாம், நடிகை பூனம் பாண்டேவை அடித்து உதைத்தார்.
இதையடுத்து பூனம் பாண்டே கொடுத்த புகாரின் பேரில் சாம் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.என்பதும் குறிப்பிடத்தக்கது.