‘வி ஹவுஸ் புரடக்ஷன்’ சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி, எஸ்.ஏ.சி, வாகை சந்திரசேகர், ஒய்.ஜி.மஹேந்திரன், பிரேம்ஜி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம், ‘மாநாடு’. எப்படி இருக்கிறது?
சிலம்பரசன் தன்னுடைய வாழ்நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திருப்பி, திருப்பி வாழக்கூடிய ‘டைம் லூப்’ னில் மாட்டிக்கொள்கிறார். அந்த டைம் லூப்பினில் முதல் அமைச்சர் கொல்லப்படுகிறார். இதை எப்படியாவது தடுத்துவிட நினைக்கிறார், சிலம்பரசன். அவர் நினைத்தது நடந்தா.. இல்லையா? இதுதான் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் மாநாடு ‘சயின்ஸ் ஃபிக்ஷன்’ படத்தின் கதை.
வெங்கட் பிரபுவின் ‘பிர்லியண்ட் ஸ்கிரீன் ப்ளே’ மாநாடு படத்தின் சுவாரஸ்யத்திற்கு முழு முதல் காரணம். கதாபாத்திரங்கள் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதிலும் சிலம்பரசன் – எஸ்.ஜே.சூர்யா இருவரின் கதாபாத்திரங்கள் சூப்பர். அதற்கேற்றார் போல் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்துள்ளனர். சிலம்பரசன் 8 அடி பாய்ந்தால் எஸ்.ஜே. சூர்யா 16 அடி பாய்கிறார். இருவரும் வெறித்தனமான நடிப்பினில் ரசிகர்களை வெகுவாக கவர்கின்றனர். கிளாப்ஸ்களை போட்டி போட்டுக்கொண்டு அள்ளுகின்றனர்.
இவர்களை போலவே சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த கல்யாணி, எஸ்.ஏ.சி, ஒய்.ஜி.மஹேந்திரன், பிரேம்ஜி, கருணாகரன் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு சிறப்பு சேர்த்து இருக்கின்றனர்.
‘டைம் லூப்’ படங்கள் போரடிக்காமலிருப்பதற்கு காட்சியமைப்புக்கள் முக்கியம். அதை ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் வெவ்வேறு காட்சிக் கோணங்களில் பிரம்மாத படுத்தியிருக்கிறார். யுவனின் பின்னணி இசை திரைக்கதையை மேலும் விறுவிறுப்பாக்கியிருக்கிறது.
எடிட்டர் கே.எல்.பிரவினின் ‘எடிட்டிங்’ படத்திற்கு மிக முக்கியமான பங்கு வகித்துள்ளது. அவருடைய எடிட்டிங் வாழ்க்கையில் இது எப்போதும் பேர் சொல்லும் படமாக இருக்கும். ஸ்பெஷல் க்ளாப்ஸ்!
படத்தின் முதல் பாதி பரபரப்பா பறக்குது! அதே மாதிரி இரண்டாம் பாதியும்! இண்டர்வல் ப்ளாக் வேற லெவெல்!
இதுவரை வெளியான ‘டைம் லூப்’ படங்களை பட்டியலிட்டு, டேய்..யப்பா.. இந்த படங்களில் இருந்து எதையும் உருவலப்பா.. என சிலம்பரசன் மூலம் வாக்குமூலம் தந்துள்ளார், இயக்குனர் வெங்கட் பிரபு. இதுவரை வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் தரமான படம் இதுவே!
மாநாடு விறுவிறுப்பான மாஸ் கமர்ஷியல் எண்டர்டெயினர்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் மூலம் சிலம்பரசனுக்கு ஒரு தரமான வெற்றி!