96 திரைப்படத்தின் மூலம்சின்னவயது திரிஷாவாக நடித்து பிரபலமான கவுரி கிஷன்,’டிக்கிலோனா’ அனகா ஆகியோர் மகிழினி என்ற இசை ஆல்பத்திற்காக இணைந்துள்ளனர்.
வி ஜி பாலசுப்ரமணியன் எழுதி இயக்கி, ட்ரெண்டிங் என்டர்டெயின்மென்ட் மற்றும் கௌஸ்துபா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில்,மகிழினி இசை ஆல்பம் தற்போது வெளியாகியுள்ளது.மகிழினியில் கவுரியும், அனகாவும் ‘லெஸ்பியன்’களாக நடித்துள்ளனர்.
மகிழினி இசைஆல்பத்தை இயக்கியுள்ள பாலசுப்ரமணியன் கூறுகையில், ““சென்னையை சேர்ந்த மலர் (கவுரி) மற்றும் தில்லியில் இருந்து வரும் இந்துஜா (அனகா) பரதநாட்டியம் மீது கொண்ட பற்றால் சந்திக்கிறார்கள். ஒத்திகை ஒன்றின் போது அவர்களுக்குள் காதல் ‘தீ’ பற்றுகிறது.
பிறகு என்ன நடக்கிறது என்பதே மகிழினி,” எல்ஜிபிடி என்று அழைக்கப்படும் ஓரின சேர்க்கையாளர்களை பற்றி சமுதாயத்திற்கு புரிய வைக்க வேண்டும் என்பதுதான் மகிழினியின் பின்னணியில் உள்ள எண்ணம் ஆகும்.
இந்த ஆல்பத்திற்காக அனாமார்பிக் லென்ஸை முதன்முறையாக பயன்படுத்தியுள்ளோம்.” என்கிறார்.இவர் இயக்குனர் அஜய் ஞானமுத்துவிடம் இணைஇயக்குநராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
கோவிந்த் வசந்தா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுத, கீர்த்தனா வைத்தியநாதன் பாடியுள்ளார். விஷ்வகிரண் நடனம் அமைத்துள்ளார்.