தமிழில் முதன்முறையாக ‘டைம் லூப்’ பாணியில் வெங்கட் பிரபு இயக்கத்தில்,சிம்பு நடிப்பில் கடந்த நவம்பர் 25ந் தேதி வெளியாகி , சிம்புவுக்கு ‘கம்பேக்’ திரைப் படமாக அமைந்தது.
இப்படம், தியேட்டரில் வெளியாகி 25 நாட்கள் நிறைவடைந்தும் விட்டது.இந்நிலையில், ரூ.100 கோடி வசூல் கிளப்பில் மாநாடு இணைந்துள்ளது.
2021 ம் ஆண்டில் விஜய் நடித்த மாஸ்டர் படத்திற்கு பிறகு ரூ .100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ள படம் சிம்புவின் மாநாடு தான்என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மாநாடு திரைப்படம் வருகிற டிசம்பர் 24ந் தேதி . கிறிஸ்துமஸ் பண்டியை முன்னிட்டு ஓடிடி தளத்திலும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் , ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘அத்ரங்கி ரே’ இந்திப்படமும் நேரடியாக ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 24-ம் தேதி வெளியாக உள்ளது.
சிம்பு மற்றும் தனுஷ் திரைப்படங்கள் ஒடிடியில் நேரடியாக மோத உள்ளன. இந்த அறிவிப்பு சிம்பு மற்றும் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.