நடிகர் கமல் புத்தாண்டு வாழ்த்து!


மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது கட்சியினருக்கும், ரசிகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து வீடியோ பதிவில் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது,”மக்கள் நீதி மய்யத் தொண்டர்கள் வருங்கால தலைவர்கள் என நினைப்பவன் நான்.உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்.சென்ற ஆண்டு கோவிட தாக்குதலின் போது களமிறங்கி பனி செய்து மீண்டு வந்தவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

அப்படி பணி செய்யும் போது  உயிரிழந்தவர்களுக்கும்,அவரது குடும்பத்தினருக்கும் என் சிரம்தாழ்த்திய வணக்கம். அஞ்சலிகள்.  இந்த வருடம் புது வருடமாக மட்டுமல்ல. ஒரு ஒளியுள்ள மாற்றத்திற்கு வித்திடும் வருடமாகவும் இருக்கும் என நம்புகிறேன்.

உங்கள் அனைவருக்கும்  எனது புத்தாண்டு வாழ்த்துகள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .

மேலும் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,”நம்பிக்கைகளைக் கொணர்வதே மாற்றம். ஓர் ஆண்டு மாறி புது ஆண்டு வருகிறதெனில், அது நம்முள் புதுப்புது நம்பிக்கைகளைப் பதியனிடுகிறது.

இந்தப் புத்தாண்டில் உங்கள் அனைவரின் நம்பிக்கைகளும் செயலாக்கம் பெறட்டும். புத்தாண்டு வாழ்த்துகள்” என்றும்  தெரிவித்துள்ளார்