
வெள்ளை நிறத்தில் வேட்டியும் சட்டையும் அணிந்திருந்தார். வீட்டின் முன்பு நின்றபடி அங்கு கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ரஜினியை நேரில் பார்த்த மகிழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் தலைவா..என்றும் தெய்வமே என்றும் உற்சாக முழக்கமிட்டனர்.
ரஜினிகாந்தும் அவர்களை நோக்கி கையெடுத்து கும்பிட்டும் கலைகளை உயர்த்தியும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் பின்னர் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் சார்பில் இனிப்புகள் வழங்கப்பட்டது