புத்தாண்டில் தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் 2022ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை முன்னிட்டுஅக்கட்சி தொண்டர்கள், மற்றும் நிர்வாகிகளை இன்று நண்பகல் 11.30 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்தார்.
தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையை அசைத்து விஜயகாந்த் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். பின்னர் தேமுதிக தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவரும் வரிசையில் காத்திருந்து ஒவ்வொருவராக விஜயகாந்த்தை பார்த்து வணக்கம் சொல்லி, வாழ்த்து கூறினார்கள்.
அவர்கள் ஒவ்வொருவருக்கும் பிரேமலதா விஜயகாந்த் அன்பளிப்பாக 100 ரூபாய் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் , மகன் விஜய பிரபாகரன், மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் இருந்தனர்.