
வியந்து போய் விழிகளை உருட்டுகிறது தெலுங்கு பட உலகம்.!
“என்னய்யா இந்த மனுசன் ..முன்னணி நடிகரா இருக்கான் ..சூப்பர்ஸ்டாரின் மருமகன்கிற பெருமை இருக்கு.ஆனா பங்க்சனுக்கு வர்ற போது பாதுகாப்புக்கு பயில்வான்களை கூட்டிட்டு வர்றதில்லை.டிரசும் சாதாரணம்.வேட்டி சட்டை. பந்தாவே இல்லை!” என்று தயாரிப்பாளர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
எல்லாம் நம்ம ஊரு தனுஷை பத்திதான்.!
இந்திப்படம் ,நடிக்கிறார்.ஆலிவுட் படம் பண்றார். தமிழ்ப்பட உலகில் விஜய்க்கு சரியான போட்டி இவர்தான்.ஆனால் இவரது காஸ்ட்யூம் செலவு இவ்வளவு கம்மியா இருக்கே !
ஆமாம் ,தெலுங்கு கதாநாயகர்களின் காஸ்ட்யூம் செலவு ஒரு கோடிய எட்டுகிறது.இவரது காஸ்ட்யூம் செலவு ஏழு அல்லது எட்டு லட்சம்தான் என்கிறார்கள்.தெலுங்கு பட ஹீரோக்கள் படத்துக்குப்படம் சம்பளத்தை வேற உயர்த்திக்கேட்கிறார்கள் என்கிற சத்தம் கேட்கிறது.












