சினிமா துறையில் சிறந்து விளங்கியதற்காக நடிகர் சிம்புவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான ஐசரி கே.கணேஷ் தலைமையில் நடந்த இவ் விழாவில் நடிகர் சிலம்பரசன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.டாக்டர் பட்டம் பெற்ற தனது மகன் சிம்புவை டி.ராஜேந்தர் உஷாராஜேந்தர் இருவரும் முத்தமிட்டு வாழ்த்தினர்
டாக்டர் பட்டம் பெற்ற சிம்பு கூறுகையில்,”இந்த பட்டம் எனக்கு உரித்தானது அல்ல. எனது இந்த நிலைமைக்கு முழு காரணம் எனது தாயும், தந்தையும் தான். சினிமாவில் நான் இந்த அளவுக்கு உயர்ந்தது அவர்களால் தான்
.9 மாத குழந்தையிலிருந்து என்னை இந்த பயணத்தில் இணைத்துள்ளார்கள். எனவே இந்த பெருமைகள் அனைத்தும் அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும். அவர்களை போன்ற பெற்றோர் எனக்கு அடுத்த ஜென்மத்திலும் கிடைப்பார்களா எனக்கு தெரியவில்லை. இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர் பட்டமளிப்பு விழாவின்போது சிம்புவுக்கு பட்டமளிப்பு அங்கியுடன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது
டாக்டர் பட்டம் பெற்ற சிம்பு கூறுகையில்,”இந்த பட்டம் எனக்கு உரித்தானது அல்ல. எனது இந்த நிலைமைக்கு முழு காரணம் எனது தாயும், தந்தையும் தான். சினிமாவில் நான் இந்த அளவுக்கு உயர்ந்தது அவர்களால் தான்
.9 மாத குழந்தையிலிருந்து என்னை இந்த பயணத்தில் இணைத்துள்ளார்கள். எனவே இந்த பெருமைகள் அனைத்தும் அவர்களுக்குப் போய்ச் சேர வேண்டும். அவர்களை போன்ற பெற்றோர் எனக்கு அடுத்த ஜென்மத்திலும் கிடைப்பார்களா எனக்கு தெரியவில்லை. இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.டாக்டர் பட்டமளிப்பு விழாவின்போது சிம்புவுக்கு பட்டமளிப்பு அங்கியுடன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது












