ஆபத்தான சூழ்நிலையிலே வாழ்ந்திட்டிருக்கோம்.! ரஜினி பரபரப்பு டுவிட் !!
இன்று காலை முதலே பொங்கல் திருநாளில், தனது வீட்டின் ரசிகர்கள் குவிந்துவிட்டனர்இதையடுத்து ரஜினி வீட்டின் வாசலுக்கு வந்தார்
ரஜினிகாந்த் வந்ததைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகம் கரைபுரண்டோட . ”தலைவா தலைவா” என்று கைகளை உயர்த்தி கோஷமிட்டனர். இதனைக் கண்ட ரஜினியும் மிகவும் மகிழ்ச்சியுடன் ரசிகர்களைப் பார்த்து ஆரவாரத்துடன் கையசைத்தார்.ரசிகர்கள் ஆர்வத்துடன் அளித்தா சால்வைகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அவர்களைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டபடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அவர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களையம் தெரிவித்து கொண்டார்.இந்நிலையில்
தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது,”ஒரு கஷ்டமான, ஆபத்தான சூழ்நிலையிலே வாழ்ந்திட்டிருக்கோம்.
இந்த கொரோனா நாளுக்கு நாள் அதிகமாகிட்டிருக்கு. இதுலேருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும், எல்லா நியமங்களையும் கண்டிப்பா கடைபிடிங்க. ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது.
அனைவருக்கும் என்னுடைய பொங்கல் வாழ்த்துகள்.” என பதிவிட்டிருக்கிறார்.