கடந்த 2000ம் ஆண்டில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ஹே ராம். இந்தப் படத்தை கமல் நடித்து,தயாரித்து இயக்கியிருந்தார்.
இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கமலுடனான நட்பின் காரணமாக சம்பளமே பெற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறப்பட்டது. இப் படம் வெளியாகி தற்போது 22 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், தற்போது ஹே ராம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது.
இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை தற்போது ஷாருக்கான் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தி ரீமேக்கில் கமல்ஹாசன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் ஷாருக்கானும், ஷாருக்கான் நடித்திருந்த கதாபாத்திரத்தில் கமலும் நடிக்கவுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாkum என தெரிகிறது.