‘வஞ்சம் தீர்த்தாயடா’ ‘ஹீரோ’ யார்? வலைவீசும் சுசிகனேசன்!
4 வி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக இசை மேதை இளையராஜா இசையில் மஞ்சரி சுசிகணேசன் தயாரிப்பில் இயக்குனர் சுசி கணேசன் இயக்கும் வஞ்சம் தீர்த்தாயடா படத்தின் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது .இரண்டு ஹீரோக்களில் ஒருவர் பிரபலமான நடிகராகவும் , மற்றவர் புதுமுக நடிகராகவும் அமையப் போகிற இந்த படத்தில் புதுமுக நடிகரின் தோற்றமும் முக பாவனையும் முக்கியம் என்பதால், ஹீரோ தேடலில் வயது வரம்பு கூட ” 20 லிருந்து 45 வரை ” என அறிவிக்கப்பட்டு இருக்கிறது .