“13 தடவை தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறேன்.பெரிய படங்கள் பண்ணியிருக்கிறேன் .ஆனாலும் இன்னிக்கி வேலை இல்லை.சும்மா இருக்கிறேன்” என்று தன்னுடைய சோகக்கதையை கொட்டியிருக்கிறார் நீது சந்திரா.
இவர் ‘யுத்தம் செய் ,யாவரும் நலம் ,தீராத விளையாட்டுப்பிள்ளை ,ஆதிபகவன் ,சிங்கம் 3 ,வைகை எக்ஸ்பிரஸ் இன்னும் சில தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிறார். இயக்குநர் அமீரை கல்யாணம் செய்து கொண்டார் என்கிற கிசு கிசு வும் வந்திருந்தது. பாலிவுட்டில் அக்சய் குமார் போன்ற நடிகர்களுடன் நடித்திருக்கிறார்.
பிரபலம்தான் ,
என்றாலும் “சந்தைக்கு வந்துவிட்டால் ராணியாக இருந்தாலும் சந்தை ரேட்டுக்குத்தான் பேரம் பேசுவார்கள்” என்பது இன்றைய பழமொழி.
பல்லு பார்த்து மாடு வாங்கணும் என்று சொல்லுவார்கள். ஆனால் பாழாய்ப்போன பாலிவுட் சந்தையில் இவரை ஒரு தொழிலதிபர் “பொண்டாட்டியாக வந்துரு. மாத சம்பளம் 25 லட்சம் தாரேன்” என்று பேரம் பேசியிருக்கிறார். நோஞ்சானாக இருந்தாலும் மாட்டுக்கு கொம்பு ஸ்ட்ராங்காகத்தான் இருக்கும் என்பது நிஜம்.
“இப்படியெல்லாம் கேட்கிறாங்க .கவலையா இருக்கு.ஏலத்தில் விலை போகாத பொருள் மாதிரி என்னை நினைக்கிறாங்க.”என்கிறார் நீது சந்திரா ,
இதுதான் சினிமா உலகம் என்பது தெரியவில்லை சந்திராவுக்கு!