G.V.கண்ணன் தயாரிப்பில்,சமீர் பரத்ராம் வழங்கும் A.ராகவேந்திர பிரசாத் இயக்கத்தில்
உருவாகும் புதிய படம்,“54321”.
இப்படத்தில்,கதையின் நாயகனாக ஷபீர் நடிக்கிறார். கதாநாயகனாக அர்வினும் கதாநாயகியாக பவித்ராவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ரவி ராகவேந்தர், ரோகினி, ஜெயகுமார், “பசங்க” சிவகுமார், ரவி வெங்கட்ராமன் உள்பட பலர் நடிக்கின்றனர்.கார்த்திக் சுப்புராஜின் ‘பிட்சா’ படத்தில் துணை இயக்குனராய் பணியாற்றிய ஏ.ராகவேந்திர பிரசாத் இப்படத்தின் கதை,திரைக்கதை வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பிட்சா தமிழ் திரையுலகில் ஒரு புதிய கோணத்தை உருவாக்கியதை போல தன்னுடைய படமும் புதிய ட்ரண்டை உருவாக்கும் என்று கூறும் இயக்குனர், படம் குறித்து பேசுகையில், 5 மனிதர்கள்,4 வாழ்க்கை முறைகள்,3 கொலைகள்,2 மணிநேரம்,1 பழிவாங்குதல் இந்த ஐந்தும் ஒன்று சேரும் கதையை திரைக்கதை வடிவமாக அமைத்து அனைவரும் ரசிக்கும் வண்ணம் உளவியல் சார்ந்த திரில்லராக உருவாகிய படம் தான் “54321”என்கிறார்.இதன் ஒளிப்பதிவை,பானு முருகன் கவனிக்க,ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்து வருகிறார்.பிலிமோராமா சார்பாக சமீர் பரத்ராம் இப்படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறார்.