இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை’ என்ற படத்தை இயக்கி வருகிறார் . இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தில் சூரி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் சேதுபதி, மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இதன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது . இந்நிலையில் விடுதலை படத்தில் வரும் முக்கிய சண்டை காட்சி சென்னை கேளம்பாக்கத்தில் எடுக்கப்பட்டு வந்த நிலையில், சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவரின் ரோப் கயிறு அறுந்து விழுந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் சண்டை பயிற்சியாளர் உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.