வாத்தி உருவான கதை! மனம் திறக்கும் இயக்குனர் வெங்கி அட்லூரி.

சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ்  பார்ச்சூன் போர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி S –
சாய் சௌஜன்யா தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழி
படமாக உருவாகியுள்ளது ‘வாத்தி’. தெலுங்கு திரையுலகின் இளம் இயக்குனர் வெங்கி
அட்லூரி இந்தப்படத்தை இயக்கியுள்ளார். சம்யுக்தா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் சாய்குமார், தணிகலபரணி, சமுத்திரக்கனி, தோடப்பள்ளி மது, நார ஸ்ரீநிவாஸ்,
பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன்,
ஹரிஸ் பெராடி, பிரவீணா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ்
இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற
நிலையில் இயக்குனர் வெங்கி அட்லூரியும் நாயகி சம்யுக்தா மேனனும் படத்தில்
பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளனர்.i

கல்வி என்பது லாப நோக்கு இல்லாத ஒரு சேவை என்று சொல்வார்கள். ஆனால் அதை
வியாபாரமாகவே ஆக்கிவிட்டார்கள். இன்னொரு பக்கம் அறக்கட்டளை துவங்கி
படிப்புக்கு உதவி செய்வதாக ஒரு பிம்பத்தை உருவாக்கினார்கள். கல்வியை அதில்
உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பட்டவர்த்தனமான வியாபாரமாக்கி விட்டார்கள்.

இதையே முழுப்படமாக சொல்லாமல் அதேசமயம் மக்களுக்கு சொல்லவேண்டிய சில
செய்திகளையும் சேர்த்து ஒரு பொழுதுபோக்கு படமாக சொல்லும்போது அவர்களை
எளிதாக சென்றடையும். நான் எப்போதும் பொழுதுபோக்கு படங்களையே
விரும்புகிறேன். இந்த படத்தில் கல்வி முறை மாற வேண்டுமா? அல்லது பெற்றோர்கள்
மாற வேண்டுமா? என்பதை விட இதற்கு ஒரு நல்ல தீர்வு ஒன்றை சொல்லி
இருக்கிறோம்.

படத்தின் கதைக்கரு, களம் என தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளுக்கும் ஒன்றுதான்
என்றாலும் சில விஷயங்களில் கொஞ்சம் மாறுதல்களை செய்துள்ளோம். அந்த
வகையில் தெலுங்கு படத்தை விட தமிழ் படத்தின் நீளம் இரண்டு நிமிடங்கள்
கூடுதலாகவே இருக்கும். சமுத்திரக்கனி இந்த படத்தில் படத்தில் பள்ளிகள் மற்றும்
கோச்சிங் பயிற்சி நிறுவனங்களை நடத்துபவராக ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில்
நடித்துள்ளார். 

 அரசு பள்ளியில் பணிபுரியும் உயிரியல்
ஆசிரியராக சம்யுக்தா நடித்துள்ளார். தனது பள்ளிக்கு உதவி செய்ய நினைத்தாலும்
தனக்கான சில எல்லைகள் கட்டுப்பாடுகள் காரணமாக எதுவும் செய்ய முடியாத ஒரு
கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

இந்தக்கதை 97-ல் இருந்து 2000 வரை உள்ள காலகட்டத்தில் நடைபெறுவதாக
உருவாக்கப்பட்டுள்ளது.  பாரதிராஜா இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம்
ஒன்றில் நடித்துள்ளார். 

 90களின் கல்வி முறையில் நடைபெற்ற சில விஷயங்களை
மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி இருந்தாலும் இப்போது வரை அந்த
விஷயங்களில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்றால் நிச்சயமாக இல்லை என்று
தான் சொல்வேன்” என்று கூறினார்.