மீசையே முளைக்காத வயதில் விடலைப்பசங்க காதலர் தினத்தில் பார்க், பீச், மால் என தனது ஜோடியை அழைத்து கொண்டு அதகள படுத்தி வரும் நிலையில், நம்ம ‘முரட்டு சிங்கிள்’ பிரேம்ஜி அமரனும் அவரது காதலிக்கு இன்று ப்ரோபோஸ் செய்திருக்கிறார்.
அதை ஒரு வீடியோவாகவும் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருக்கிறார். எப்படி தெரியுமா? இரண்டு மதுபாட்டில்களுக்கு முன் நிற்கும் அவர், “ஹேப்பி வேலண்டைன்ஸ் டே. எனக்கு தெரியும் உனக்கு 18 வயதுதான் ஆகிறது என்று. இன்று உன்னை சாப்பிடாமல் விடமாட்டேன்” என கூறுகிறார்.
அதேபோல் மற்றொரு ட்வீட்டில்,பிப்ரவரி மாதத்தில் 29,30 31 தேதிகளை நீக்கியதுபோல் பிப்ரவரி 14ஆம் தேதியையும் நீக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த இரண்டு ட்வீட்களும் சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது.
Happy Valentine’s Day 💙 pic.twitter.com/kUykdoghJ1
— PREMGI (@Premgiamaren) February 14, 2023