நடிகர் ரஜினிகாந்த் மற்றும் லதா தம்பதியரின் இளைய மகள் சௌந்தர்யா.இவரும் தனது சகோதரி ஐஸ்வர்யாவை போலவே திரைப்படங்களை இயக்கி வருகிறார். இவர் தனது தந்தை ரஜினிகாந்தை வைத்து கோச்சடையான் என்னும் 3 டி அனிமேஷன் திரைப்படத்தையும், நடிகர் தனுஷ் நடிப்பில் வேலையில்லா பட்டதாரி-2 படத்தையும் இயக்கி இருந்தார்.
சௌந்தர்யா அபெக்ஸ் மருந்து நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2வது குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் சௌந்தர்யா, ரேஞ்ச் ரோவர் கார் சாவி பவுச்சுடன் காணவில்லை என தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ஏப்ரல் 23ந் தேதி கோபாலபுரத்தில் இருந்து தனியார் கல்லூரி சென்ற போது காரின் சாவி காணாமல் போனதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் தனது வீட்டிலுள்ள லாக்கரில் இருந்த நகைகளைக் காணவில்லை என சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் ரஜினியின் மூத்த மகள் 2019ம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த வைர நகைகள், நவரத்தினக் கல் மற்றும் 60 சவரன் தங்க நகைகளைக் காணவில்லை என்றும் புகார் அளித்திருந்த நிலையில்,மந்தைவெளியை சேர்ந்த ஈஸ்வரி என்ற பணிப்பெண் நகையை திருடியது தெரியவந்தது.
இந்நிலையில்,. தற்போது 2 வது மகள் சௌந்தர்யாவின் விலை உயர்ந்த சொகுசுக்காரின் சாவியை காணவில்லை என புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.