மாலத்தீவு கடலுக்கடியில் நடிகை கனிகா!
தமிழ் சினிமாவில் 5 ஸ்டார் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை கனிகா. அஜித்துடன் ’வரலாறு’, இயக்குனர் சேரனுடன் ‘ஆட்டோகிராப்’ உள்ளிட்ட படங்களிலும்,, சமீபத்தில் வெளியான ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள கனிகா,தெலுங்கு மலையாள திரைப்படங்களிலும் திருமணத்திற்கு பிறகு சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார்
இந்நிலையில் நடிகை கனிகா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் திரையுலக நட்சத்திரங்களின் திடீர் சொர்க்கபுரியாக மாறியுள்ள மாலத்தீவுக்கு ‘ஜாலி’ சுற்றுலா சென்றுள்ளார்.அங்கு கடற்கரையில் நீச்சல் உடை உள்பட கிளாமர் காஸ்ட்யூமில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இப்புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் கனிகா கடலுக்குள் தனது மகனுடன் நீந்தும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில், ‘தண்ணீருக்கு அடியில் வாழ்க்கை மிகவும் வித்தியாசமாகவும் அழகாகவும் இருந்தது. இன்று காலை என் மகனுடன் நான் தண்ணீருக்குள் சென்றபோது கொஞ்சம் பயமாக இருந்தது.
ஆனால் கடலுக்கு அடியில் பல மீட்டர்கள் ஆழத்தில் சென்ற போது அந்த அழகை பார்த்து அனுபவித்தேன், இந்த அழகான காட்சியை என் கண்களால் பார்த்ததை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். மேலும் தான் Sun Siyam Olhuveli கடற்கரை விடுதியில் தங்கி இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.