பாலிவுட்டில் சில படங்களில் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் கியாரா அத்வானி இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மாற, இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்துக்கு பிறகும் பழையபடியே பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் கியாரா அத்வானி. திருமணத்திற்கு பிறகு சிலநடிகைகள் நெருக்கமான காதல் காட்சிகளில் காட்டுவது வழக்கம்.
ஆனால் கியாரா அத்வானி காதல் மற்றும் கவர்ச்சி காட்சிகளில் ரசிகர்களுக்கு எந்த குறையும் வைக்காமல் நெருக்கமான காட்சிகளில் கூட புகுந்து விளையாடி வருகிறார்.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் ராம்சரன் ஜோடியாக நடித்து வரும் கியாராஅத்வானி காதல் காட்சிகளில் தாரளமாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்,இயக்குநர் சமீர் வித்வான் இயக்கத்தில் கார்த்திக் ஆர்யான் உடன் கியாரா அத்வானி ஜோடி சேர்ந்து நடித்து வரும் ‘சத்ய பிரேம் கி கதா’ படத்தில் இடம்பெறும் நசீப் சே பாடல் இன்று வெளியாகியுள்ளது.
லடாக் பகுதியின் பனிப்பொழிவு காட்சிகளுக்கிடையே சூடான நூடுல்ஸை கார்த்திக் ஆர்யானும் கியாரா அத்வானியும் வாயோடு வாய் வைத்து உறிஞ்சி சாப்பிடும் காட்சிகள் இளசுகளை சூடேற்றியுள்ளது.
மேலும், பாடலின் இறுதியில் கார்த்திக் ஆர்யான், கியாரா அத்வானிக்கு வெறித்தனமாக கொடுக்கும் லிப் லாக் காட்சிகளும் இடம்பெற்று ரசிகர்களை ஏகத்துக்கும் குஷி படுத்தியுள்ளது.
இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும், திருமணத்திற்கு பிறகும் இப்படியா? என்றும், உங்கள் கணவர் சித்தார்த் மல்கோத்ரா இந்த பாடலை பார்த்தால் ஏதும் நினைத்துக்கொள்ள மாட்டாரா?ஆர்யான் கொடுத்து வைத்தவர் என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.
கார்த்திக் ஆர்யான், கியாராவின் கிளு கிளு முத்தக்காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.
Kiara’s latest liplock🎬👄 #KiaraAdvani #SatyaPremKiKatha @kiara📸 pic.twitter.com/TtlXrOl3kx
— FLL-Films Love Life (@FilmsLoveLife) May 27, 2023