யாஷிகாவுடன் திருமணமா? ரிச்சர்ட் பரபரப்பு பதில்!
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் சகோதரர் நடிகர் ரிச்சர்ட் இவர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான ‘ருத்ர தாண்டவம்’.உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.தற்போது சில படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை யாஷிகாவுடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் ஒன்றை தனது சமூக வலை தளத்தில் வெளியிட்டு இருந்தார் இதையடுத்து இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் செய்திகள் தீயாக பரவியது.
முதலில் இது குறித்து ரிச்சர்ட் யாஷிகா இருவருமே வாய் திறக்காத நிலையில்,தற்போது காதல் மற்றும் திருமணம் குறித்த வதந்திகளுக்கு நடிகர் ரிச்சர்ட் ரிஷி பதிலளித்துள்ளார். .இது குறித்து ரிச்சர்ட் கூறுகையில், , “நானும் யாஷிகாவும் நடிக்கும் படத்தின் புகைப்படங்களைத்தான் இணையத்தில் பகிர்ந்திருந்தேன் இப்படத்தை கன்னட இயக்குனர் வினய் பரத்வாஜ் இயக்குகிறார். படத்தின் புரோமோஷனுக்காக தான் அந்த புகைப்படங்களை பகிர்ந்தேன், மற்றப்படி எனக்கும் யாஷிகாவிற்கும் நடுவில் காதலும் இல்லை கல்யாணமும் இல்லை” இவ்வாறு அவர் கூறியுள்ளார்