விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள மிஸ்ட்ரி திரில்லர் படம் ’பெர்த்மார்க்’. இதில்,ஷபீர் மற்றும் மிர்னா ஆகியோர் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க,இவர்களுடன் முன்னணி கதாபாத்திரங்களில் தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பிஆர் வரலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் கூறும்போது, ‘பெர்த்மார்க்’ கதை ஒரு மிஸ்ட்ரி-டிராமாவாக இரண்டு முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதை.படத்தில் சில மர்மங்கள் மற்றும் சஸ்பென்ஸ் உள்ளது. ஆனால், அதை விட எமோஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.
இதில், டேனியல் (அ) டேனியாக ஷபீர் கல்லாரக்கல் மற்றும் ஜெனிபராக மிர்னா நடிக்கிறார். இந்த கதை 90’களில் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. கார்கில் போருக்குப் பிறகு தாயகம் திரும்பிய டேனி என்ற சிப்பாய், தன்வந்திரி என்ற பெர்த் வில்லேஜுக்கு கர்ப்பமாக இருக்கும் தன் மனைவியை அழைத்து செல்கிறார்.
எந்தவிதமான சிக்கல்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் இல்லாமல் இயற்கையான பிரசவத்திற்குப் பெயர் போன இடம் இந்த கிராமம். இது போன்ற கிராமங்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இன்றும் உள்ளது.
படத்தின் முன்னணி கதாபாத்திரங்கள் இந்த கிராமத்தில் தங்கியிருந்தபோது, அவர்கள் ஏதோ வித்தியாசமானதாக உணரும் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட கற்பனையான கதையாக அமைக்கப்பட்டுள்ளது.என்கிறார்.