நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் அவரது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில்,லியோ படத்தில் இடம்பெறும் விஜய் பாடிய ‘நா ரெடி’என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இது குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், இப்பாடலுக்காக காத்திருந்த ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தும் விதமாக அதிரடியாக ‘நா ரெடி’ பாடலின் ப்ரோமோவையே சோனி மியூசிக் பிரத்யேகமாக வெளியிட்டுள்ளது.
“நான் ரெடி வரவா.. அண்ணன் நான் இறங்கி வரவா.. தனியா வரவா..ன்னு” என்ற விஜய்யின்குரலில் , அனிருத் இசையில் உருவான பாடல் வைரலாக பரவி வருகிறது.