பாலிவுட் நடிகை உர்பி ஜாவேத் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் படு கிளாமரான அரை நிர்வாண வீடியோக்களையும், மிக குறைந்த ஆடைகள் கொண்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அவருக்கு 4 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். இவரது வீடியோக்களுக்கு இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில்,எதிர்ப்புகளும் கிளம்பி வருகிறது.இவ்வாறு உடை அணிவதற்காக அவர் மீது போலீஸில் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் அவர் அனைவரிடமும் மன்னிப்பும் கேட்டுள்ளார்.
இந்நிலையில், மீண்டும் இன்ஸ்டாகிராமில் தனது வெற்று உடல் முழுவதும் பேஸ்ட்டை பூசிக்கொள்ளும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
உடலின் மேல் பகுதியில் பொட்டுத்துணி இல்லாமல் ,முழுக்க, முழுக்க பேஸ்டை மட்டுமே உர்பி ஜாவேத் உடலில் அவரது உதவியாளர்கள் இருவர் தடவிக் கொண்டிருக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளதை பார்த்து பல ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து, இந்த வீடியோவை ‘டிஸ்லைக்’ செய்து வருகின்றனர்.
ஒரு சிலர் ‘நடிகை உர்பி ஜாவேத்துக்கு மனநோய் ஏற்பட்டு விட்டதா’? என்றும் பதிவிட்டு வருகின்றனர். இதுவரை இல்லாத அளவில் உர்பி ஜாவேத் வெளியிட்ட வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் கண்டனங்கள் குவிந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..