தி பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி மற்றும் டாக்டர் கவிதா பிரியதர்ஷினி இணைந்து தயாரிக்கும் புதிய படம் “ மஞ்சள் வீரன் “
இந்த படத்தில் பிரபல வைரல் யூடுயுபர் ‘டிடிஎப்’.வாசன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் கதாநாயகி, மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடந்து வருகிறது.
மேலும், இப்படத்தில் கூல் சுரேஷ் குணசித்திர வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவை கொளஞ்சி குமார் மேற்கொள்கிறார்.ஸ்ரீதர் மாஸ்டர் நடனம் அமைக்கிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கும் செல்அம் கூறுகையில்,”இப்படம் அனைத்து வயதினருக்கும் பிடிக்கும் ஜனரஞ்சகமான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் இறுதியில் நடக்க உள்ளது என்கிறார்கள்.இப்படத்தின் . பூஜை மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு TT.F வாசனின் பிறந்தநாளான நேற்று சென்னையில் நடந்தது.