Thursday, February 25, 2021
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Cinema Murasam
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Events

தீபாவளி சிறுகதை – இயக்குநர் வ.கெளதமன்.

admin by admin
October 29, 2016
in Events
0
604
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

22-1419229105-gowthaman-600-jpg-450x338பாண்டு மாமாவின் குரல்.

நடந்து முடிந்த ஒவ்வொரு சம்பவத்தையும் நினைத்துப் பார்த்தால், காலம் பல விதமானச் சோதனைகளை ஒரு விளையாட்டாக நடத்திப்பார்த்துவிட்டுத்தான் சென்றிருக்கிறது நம்மைவிட்டு. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இப்போதைய கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு அருகில் உள்ள எடைச்செருவாய் கிராமத்தின் இறுதியிலும் பாளையம் கிராமத்தின் தொடக்கத்திலும் உள்ள பதினைந்துப் பதினாறு வீடுகளைக் கொண்ட ஒரு சின்னப்பகுதி. சாலை முழுக்க இரண்டு பக்கங்களிலும் பெரும், பெரும் புளியமரங்கள். கோடையில் கொட்டிய இலைகலெல்லாம் மழைக்காலம் தொடங்கிவிட்டதால் கிளிப்பச்சை நிறத்தில் சிறுசிறு புதிய புளிய இலைகள் துளிர்த்து காற்றுக்கு தலையசைத்து அந்த சுற்றுப்புறத்தையே குளுமையாக்கிக் கொண்டிருந்தது அன்று.
வழக்கமாகக் கிளைகளில் உட்கார்ந்து விளையாடும் மைனாக்களும் வாலாட்டிக் குருவிகளும் பயந்து, படபடத்து கிளைவிட்டு கிளை மாறி மாறி உட்கார்ந்து பறந்து கொண்டிருந்தன. மேலத்தெரு பசங்களும் இங்குள்ள பொடிசுகளும் சீனிவெடிகளையும் வெங்காய வெடிகளையும் வெடித்து அதம் பரப்பி, கூக்குரல் இட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவசர, அவசரமாகப் பலகாரம் செய்து முடித்து, சாமி கும்பிட்ட பெரிய வயது பெண்கள் ஆக்கனூரிலிருந்து எடைச்செருவாயிலிருக்கும் தனது மகள் வயிற்றுப் பேரப்பிள்ளைகளுக்கு எடுத்துக்கொண்டுபோய் கொடுத்து, அவர்கள் சாப்பிடுவதை ஆசை, ஆசையாய்ப் பார்க்க, ஓட்டமும் நடையுமாய் ஓடிக்கொண்டிருக்க, அவர்களுக்குத் தெரியாமல் லெட்சுமி வெடியைக் கொளுத்திப் போட்டு அந்தப் பெண்கள் பதறுவதைப் பார்த்துக் கைத்தட்டிச் சிரிக்க, சிறுவர்களின் ஏழு தலைமுறைகளின் முன்னேர்களையும் இழுத்து அவர்கள் ஏசி ‘வாசாப்பு’ விட்டுச் செல்ல, அதற்கும் இவர்களுக்கு சிரிப்புதான். ’எங்கப்பா திருச்சில எடுத்தாரு. எங்கப்பா கடலூரிலிருந்து எடுத்துகிட்டு வந்தாரு. எங்கப்பா இதுக்குன்னே மெட்ராஸ் போயி எடுத்துகிட்டு வந்தாரு’ என்று ஆளாளுக்கு ‘புருடா’ விட்டாலும் அனைத்துப் பசங்களின் புதுச்சட்டைகளும் திட்டக்குடியில் எடுத்தவைதான். மேல் சட்டையிலும் கால் சட்டையிலும் சந்தனம் வைத்து குங்குமம் இடப்பட்டிருக்கிறது. பெரியவர்கள் அதிகாலையிலேயே எழுந்து கிடாக்கறி எடுத்து இட்லி, பணியாரம் செய்து, புதுச்சட்டை உட்பட அனைத்தையும் சாமி முன் வைத்துப் படைத்தார்கள். எண்ணெய்த் தேய்த்துக் குளித்தவுடன் புதுத்துணி அணிந்து சாப்பிட்டுவிட்டு வெடியோடு வீதிக்கு வந்துவிட்டார்கள் சிறுவர்கள். இருட்டும் வரையிலும் வெடிகள். பிறகு இருட்டில் மத்தாப்பு.
இவ்வளவு கொண்டாட்டங்களும் நடந்துகொண்டிருக்க, ‘இனிப்புப் புளியின்’ கீழ் உள்ள சொலாப்பு கல்லில் கால்களை ஆட்டியபடி பழைய கால்சட்டையோடு தொண்டையில் ஏதோ அடைக்க, மனசு கணத்த நிலையில் ஏழெட்டு வயது நிறைந்த கதிரவன் எட்டி, எட்டி சாலையின் கிழக்கே ஏக்கத்தோடுப் பார்த்துக் கொண்டிருக்கிறான். காலையிலிருந்து ஒரு ‘பொட்டு’ வெடி கூட வெடிக்கவில்லை.
‘எல்லாரும் புதுச்சட்டை போட்டுருக்காங்கம்மா.. எனக்குத் துணிகூட இல்லன்னாலும் பரவாயில்ல… வெடியாவது வாங்கித்தாம்மா…’என்று காலையிலேயே நாலைந்து முறை அம்மாவைக் கேட்டுவிட்டான். இருந்து, இருந்து பார்த்தவள், ‘போடா ஒப்பன் பொழச்ச பொழப்புக்கு அந்தாளையே போயி கேளு.. கட்சி, கட்சின்னு இருபத்தி நாலு மணி நேரமும் ஓடுனா பொட்டச்சி நாமட்டும் என்ன பண்ணுவேன்..போ’ என முட்டி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு வீட்டின் பின் கட்டுக்குப் போய்விட்டாள்.
%e0%ae%b5-_%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8dதிட்டக்குடிக்குப் போன அப்பா எப்படியும் திருவேங்கடத்தில் (பேருந்தின் பெயர்) வந்துவிடுவார் என்றுதான் கதிர்- கிழக்கையே பார்த்துக்கொண்டிருந்தான். சொலாப்பு கல்லருகே கொஞ்ச நாட்களாகத்தான் பேருந்து நின்று போகிறது. அதற்கும் காரணம் அப்பாதான். அவர் கம்யூனிஸ்ட்காரர் என்பதால் திட்டி- போராட்டம் செய்து, அதன்பின் தான் அந்த இடம் ‘ஸ்டாப்பு ‘ ஆனது.
மதியம் பனிரெண்டு மணி, காலையில் சாப்பிட்டது சோளச் சோறு. ஆனால் ஊர் முழுக்க கறி வாசமும் பலகார மணமும். ’தனக்கு மட்டும் ஏன் இந்த நிலமை’ தீடீரென்று அப்பா நம் கண்முன் வந்து எல்லாப் பயலுகளையும் போல நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைத்துவிட மாட்டாரா? என்கிற ஏக்கம், ஆசை அவனது மனசு முழுக்க காட்சியாக வந்து வந்து போக பேருந்து மட்டும் ஏனோ வெகுநேரமாகியும் வரவேயில்லை. முன்பெல்லாம் அப்பா எப்பொழுதும் இரவு பத்தரை மணி பஸ்சுக்குத்தான் வருவார். ஏனென்றால் அதுதான் கடைசிப் பேருந்து. அம்மா, கதிரவன் உட்பட அவனது மூத்த சகோதரிகள் இருவர் தூங்குவதற்குள் அப்பா வாங்கிவரும் ஒரு கிலோ அரிசியைக் கஞ்சி காச்சி அவர்களுக்குப் பசி அடங்கிவிட காத்திருப்பாள். அதற்குள் பிள்ளைகள் தூங்கிவிடும். சில நேரங்களில் திட்டக்குடி தொந்திக்கடையில் பரோட்டா சால்னாவோடு பேருந்திலிருந்து இறங்குவார் அப்பா. தூங்கிக் கொண்டிருக்கிற கதிரையும் பிள்ளைகளையும் தூக்கக் கலக்கத்தில் தூக்கி வைத்து ‘இன்னிக்குத் தோழர்கள் மெட்ராசுலிருந்து வந்திருந்தாங்க விவசாயிகள் சங்க கூட்டம்’ என்றபடியே பேசிக்கொண்டு தன் கையாலேயே ஊட்டிவிட்டு, வாயை துடைத்துப் படுக்க வைத்துவிடுவார். அம்மாவிற்கு கோபம், கோபமாக வரும். ஆனால், கதிருக்கு அப்பா மேல் எப்பொழுதும் பாசம்தான். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அப்பாவை பலர் தேடிவந்து ’தோழர்…தோழர்’ என்று அழைப்பது ஏனோ அவனுக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.
எதோ ஒரு பேருந்து வருகிறது. கதிருக்கு முகம் பூக்கிறது. சேகர் பஸ்தான். இவன் பார்வைக்கு நிற்பது போல் வந்து வேகமெடுக்கிறது. மீண்டும் வெறுமை. கதிருக்கு தான் முதன் முதலாக கால்சட்டை போட்ட நிகழ்வு வந்து போகிறது. அப்பா ஒரு நாள் சொல்கிறார் ‘கம்யூனிஸ்ட் கட்சிக் கொடி தச்சதுபோக கொஞ்சம் துணி மீந்திருச்சி உனக்கு கால் சட்டை தைக்கலாம் பிரஸ்ல இருக்கு நாளைக்கு எடுத்தாரேன்.’
சொன்ன நொடியிலிருந்து கதிருக்கு றெக்கைக் கட்டிய நிலைதான். அதற்கு முன்வரை ராமலிங்க சித்தப்பாவின் பல துண்டுகள்தான் இவனுக்கு இடுப்பு மறைப்பு. அதற்கு முன்பு எப்பவோ யாரோ போட்டுப் பயன்படுத்திவிட்டுத் தந்த ஒரு கால்சட்டை. அதுவும் நைந்து, நைந்து பிய்ந்து தூக்கியெறிந்தாகிவிட்டது. சில நேரம் தோளில் கிடக்கும் துண்டை ராமலிங்கம் சித்தப்ப பிரியத்தோடு தருவார். பல நேரங்களில் அவர் நடந்துசெல்லும்போது பின்பக்கமாகப் பதுங்கி சென்று இழுத்துக்கொண்டு ஓடும் நிலைதான்.
துணி கைக்கு வந்து சேர ஆறேழு நாட்களாகிவிட்டன. ரத்த நிறத்தில் துணி. எதுவாக இருந்தால் என்ன? புது கால்சட்டை. பாளையத்திலிருந்து முக்கால் மைல் தூரம் உள்ள மணலாற்றை கடந்தால் ஆடுதுறை. அப்பா ஆடுதுறை கோவில் பக்கத்தில் உள்ள டெய்லரிடம் அழைத்துச் சென்றார். கதிருக்கு அளவு எடுக்கப்பட்டது. சொல்ல முடியாத ஆனந்தம். இரண்டு நாளில் தந்துவிடுவதாக வாக்குறுதி. இரண்டு நாட்கள், நான்கு நாட்களாகிவிட்டன. கொடியில் வெட்டாமல் அப்படியே கிடக்கும் சிகப்புத்துணி. தினமும் காலையிலும் மாலையிலும் ஆற்றைக் கடந்து டெய்லர் முன் சென்று நின்றதுதான் மிச்சம். ’ஏண்டா காசும் தரல, ஒண்ணும் தரல ஒப்பன் வேணா கட்சி கட்சின்னு ஒங்க குடும்பத்தவுட்டு ஓடலாம். அதுக்காக நான் ஓசில தச்சித் தரமுடியுமா? எனக்கும் குடும்பம், குட்டி இருக்குல்ல.. காசோட வந்தா கைல கால்சட்டை…. போ’ என்ற படியே டெய்லர், கழுத்தில் கிடக்கும் அளவு நாடாவை எடுத்து வேறோரு துணியில் வைத்து சோப்புக் கட்டியால் கோடிழுத்து வெட்ட ஆரம்பிக்கவே, கதிருக்கு கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டன.
அழுதபடியே வீட்டிற்கு வந்து அப்பாவிடம் சொல்ல, ‘நாலைஞ்சு நாள்ல வாங்கிடலாம்’ என்றவாறே வாடகைச் சைக்கிளை மிதித்துப் புறப்பட்டுவிட்டார். ஆடுதுறை குளத்துக்குப் போகிறமாதிரி டெய்லர் கடையையும் கயிற்றுக் கொடியில் கிடக்கும் சிகப்புத் துணியையும் பல தடவைகள் கதிர் பார்த்தபடி குறுக்கும் நெடுக்குமாக சென்று வந்தான். துக்கம் தொண்டையை அடைக்கும். வெயிலில் ஆற்று மணலில் கால் சுடச் சுட நடந்து வந்தது வேறு. மீண்டும் திரும்பி வீட்டிற்குப் போக வேண்டும்.
ஒரு நாள் மாலை நேரம் ஏதோ ஒரு துணிவோடு டெய்லர் கடை முன்பு நின்றான். அவனையே உற்றுப் பார்க்கிறார். கொடியில் துணி இல்லை. கதிருக்கு உதடு துடிக்கிறது. பேச்சு வரவில்லை. அந்த ஆள் இவனைக் கண்டுகொள்ளாமல் சட்டென்று முகம் திருப்பிக் கொள்கிறார்.
கண்களிலிருந்து கண்ணீர் பொல, பொலவென்று கொட்ட, கதிர் திரும்பி நடக்க ஆரம்பிக்கிறான். ‘டேய் இங்க வாடா’ டெய்லரின் குரல். திரும்பிப் பார்க்க, ‘ஒப்பன் காசு குடுத்து வாங்கறதுக்குள்ள இது எங்க கடையிலேயே கெடந்து மக்கிடும். இந்தா போட்டுக்க, காந்தி கணக்குல எழுதிக்கிறேன்’ எனத் தூக்கிப் போட, அப்பாவைத் திட்டிய அவமானமா? அல்லது அதிகப் படியான மகிழ்ச்சியா? என்பது தெரியாமல் அங்கிருந்து கலங்கியபடியே ஆற்றை நோக்கி ஓடி வந்தான். மாலை மங்கி, நிலவு பூத்து நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருக்கின்றன. கோமனத் துணிபோல் நடு ஆற்றில் வெள்ளிக்கோடாகத் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனருகே ஓடிவந்து மூச்சிறைக்க நின்று, ‘ராமலிங்க சித்தப்பாவின் துண்டை அவிழ்த்துவிட்டு சிகப்பு கால் சட்டையைப் போட, உலகமே தன்னைச் சுற்றி வருவதுபோல கதிருக்கு குதூகலம். ஒரு புதுநம்பிக்கை. ஆற்றிலிருந்து தெரியும் பிரம்மாண்டமான ’குற்றம் பொறுத்தவர் ஆலயத்தின்’ கம்பீரத்தைப் போல தானும் கம்பீரமானவன் என்பது மாதிரி நெஞ்சை நிமிர்த்திப் பெருமூச்சு இழுத்துவிட்டான்.
அந்த சிகப்பு கால்சட்டையும் முடிந்தவரை உழைத்து, பின்னால் இரு வட்டங்களை உருவாக்கிவிட்டது. பசங்கள் பேப்பர்களைக் கிழித்து ‘போஸ்ட் பாக்ஸ்’ என்று உள்ளே போட்டுக் கிண்டலடிக்க, நான்கு நாட்களுக்கு முன்னால்கூட மாரியம்மன் கோவில்முன் வையாபுரிக்கும் அவனுக்கும் கட்டிப்புரண்டு சண்டை.
மணி மதியம் ஒன்றரை ஆகிவிட்டது. வந்த பேருந்தெல்லாம் ஒரு சில நின்றும், சிலர் இறங்கியும் அப்பா மட்டும் அதில் இல்லை. தான் செய்தது சரியா? தவறா? என்று கதிருக்கு தன் மேல் கோபமாகவும் அதேநேரத்தில் பெருமையாகவும் ஒரு நிகழ்வு கொஞ்ச நாட்களுக்கு முன் நடந்தது. திருச்சிக்கு சென்றுவிட்டு கடலூருக்கு ஒரு குடும்பம் புதிய அம்பாசிடர் கார் ஒன்றில் பயணித்துப் பசி எடுக்கவே, இனிப்புப் புளியின்கீழ் நிறுத்தி பெரம்பலூரம்மாள் வீட்டில் தண்ணீர் வாங்கி வைத்துச் சாப்பிட்டு முடித்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து, காற்று வாங்கிவிட்டு அவர்கள் புறப்படத் தயாரனபோது, கதிரும் அவன் வயதுப் பசங்களும் அங்கே கூடி அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பணக்கார அம்மா ஆளுக்கு இரண்டு திராட்சைப் பழங்களைத் தந்துவிட்டு வண்டியில் ஏறி புறப்படப் போகும் சமயத்தில் காரின் வலதுபக்க டயரருகே கிடந்த பத்து ரூபாய் தாளைக் கதிர் பார்த்துவிட்டான். அது பணமா? வேறு தாளா? என்று பெரும் குழப்பம் இவனுக்கு.
வண்டியை எடுத்துவிட்டார்கள். அது பணம்தான். ஓடிப்போய் எடுத்தவன், வேகவேகமாக கத்திக்கொண்டே, ‘ஏங்க… ஏங்க பணம்’ என்று பின்னால் ஓட அந்தம்மாவின் காதில் விழுந்துவிட்டது. வண்டி நிற்கவே, இறங்கி புன்சிரிப்போடு வாங்கிக் கொண்டு, ஒரு திராட்சைக் கொத்தை அவன் கையில் திணித்துப் பாராட்டிவிட்டு அவர்கள் காரில் ஏறிப் புறப்பட்டார்கள். ஆளுக்கு இரண்டாகத் திராட்சைப் பழத்தைப் பழத்தைப் பிட்டுத் தின்றுகொண்டே…. இவனுக்குப் பலமான திட்டு விழுந்தது. இப்பொழுது நினைத்துக்கொண்டான் அந்தப் பத்து ரூபா இருந்தாகூட ஒரு புதுச் சட்டை தச்சிருக்கலாம். ‘ச்சீ அனாலும் அந்த காசுல தச்சுப் போட்டா நாம மனுஷனா? அதுக்கு அம்மண குண்டியோட கூட திரியலாம்.’
தூரத்தில் சத்தம். அது பேருந்து இல்லை. மரத்துண்டுகள் ஏற்றிவந்த லாரி. கதிர் வீட்டிற்கு மதியம் சாப்பிடப் போகவில்லை. ஓலைப்பட்டாசுகளும் பாம்புகளும் வெடித்துச் சிதறிக் கொண்டிருக்கின்றன. சிலர் மாலைகாட்சிக்கு ’கிருஷ்ணா பேலசுக்கு‘ போவதாக பேசிக் கொள்கிறார்கள். சிரிப்பும் கும்மாளமும் தவிர பசங்களிடம் வேறு எதுவும் இல்லை. ஆனால், காலையிலிருந்து நாம ஒரு தடவைகூட சிரிக்கலையே. கடைசிவரைக்கும் நம் வாழ்க்கை இப்படிதானா? என அவன் மனம் குமுறுகிறது. அவர்களைக் கடந்து எழுந்து போகவும் மனசு வரவில்லை. எழுந்து நடந்தால் ‘போஸ்டாபீஸ்’ என்று கிண்டலடித்துவிடுவார்கள் என்று பயம். பேருக்கு, பேச்சுக்கு ஒரு சின்ன சீனிபட்டாசுகூட கொடுத்து எவனும் வெடிக்கச் சொல்லவில்லை. கதிரின் மனசு மட்டுமல்ல, பகலும் கரைந்து மங்க ஆரம்பித்துவிட்டது. தூரத்தில் எங்கெங்கோ மத்தாப்பின் பொறிகள் தெறிக்கிறது. இனியும் கிழக்கு நமக்குச் சாதகமாக இருக்காது என முடிவெடுத்து, வீடு நோக்கி நடக்க ஆரம்பித்துவிட்டான். அம்மா எங்கேயோ அரிசி கடன் வாங்கி வந்து சோறாக்கி வைத்திருந்தது. கதிரின் முகத்தைப் பார்த்துக் கலங்கியபடியே, ‘அடுத்த வருஷம் நல்லா கொண்டாடலாம், மாரியாயி நம்பளக் கைவிடமாட்டா..’ என்று சொன்னதுகூட கேட்காமல் வீட்டின் உள் அறைக்குள் சென்று சுருண்டு படுத்துக் கொண்டான்.
சொலாப்பு கல்லருகே ஹாரன் அடித்தபடி ’நாராயணமூர்த்தி பேருந்து’ வந்து நிற்கிறது. சனங்கள் இறங்குகிறார்கள். கதிரின் வீட்டின் முன்னால் செருப்பு கழட்டிவிடும் சத்தம். அம்மா ஓடிச் சென்று சில்வர் சொம்பில் தண்ணீர் மோந்து வந்து தருகிறாள். ‘எங்கே அவன்?’ என்றதும் கதிருக்கு சட்டென்று அந்தக் குரலைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அம்மா கலங்கியபடியே, ‘எல்லாரும் புதுச் சட்டை போட்டிருங்காங்க எனக்கு இல்லியா?ன்னு கேட்டுக் கேட்டு அழுதுட்டு, சாப்பிடாமகூட உள்ள போயி படுத்துகிட்டான் தம்பி.
’கதிரு’ என்ற படியே இருட்டறைக்குள் நடந்து வரும் சத்தம். இப்பொழுது புரிந்துவிட்டது. அம்மாவின் மூத்ததம்பி கதிரின் தாய்மாமன் பாண்டுவின் குரல்தான் அது. பெருமூச்செடுத்து கதிருக்கு அழுகை வந்தது. மாமா அவனை எழுப்பித் தூக்குகிறார். இவன் குரலெடுத்து அழ ஆரம்பித்தான். அவனது கண்ணீரைத் துடைத்து விட்டு, ‘ஏண்டா கண்ணு .. எதுக்குடா அழுவுற? மாமா உனக்கு வெடி வாங்கிட்டு வந்திருக்கேன்’ என்றபடியே அவனதுமுன் சாமிக்குப் படையல் வைப்பதுபோல் ஒவ்வொன்றாக மஞ்சள் பையிலிருந்து எடுத்து வைத்தார்.
இறுதியாக பேப்பர் சுற்றிய ஒரு பொட்டலத்தை எடுத்து, ‘ஒனக்கு கால்சட்டை, மேச்சட்டையெல்லாம் மாமா வாங்கியாந்திருக்கேன்’ என்று பிரித்து அவனின் மார்பில் வைத்து நல்லாயிருக்கா? எனக்கேட்க, அம்மா நிலைப்படியைப் பிடித்தவாறு விசும்பி, விசும்பி அழுதாள். கதிருக்கும் அழுகையை அடக்க முடியவில்லை.
’எதுக்குடா கண்ணு அழுவுற… தாய் மாமங்கறவன் தாய்க்குச் சமமானவண்டா. நீ நல்லாப் படிச்சு, பெரிய ஆளாயி என்னைப் பாத்துக்கிறியோ இல்லையோ, ஒங்கம்மாவ பாத்துக்கணும்’ என்றபடியே அவனுக்கு கால்சட்டையையும் மேல் சட்டையையும் போட்டுவிட்டு, ‘ஜம்முன்னு ராசா மாதிரி இருக்காம் பாரு’ என்று சொன்னபடி அவனை வாரி அணைத்து முத்தமிட, கதிர் மாமாவைக் கட்டிக்கொண்டான்.
’அக்கா, என் மாப்ளைக்கு சாப்பாடு போட்டு எடுத்தா’ என்றபடியே கதிரை தன்மடியில் உட்கார வைத்து தட்டில் வந்த சோற்றைப் பிசைந்து பாசத்தோடு ஊட்டிவிட்டு வாய் துடைத்து சிம்னி விளக்கில் மத்தாப்பு கொளுத்தி கதிரின் கைகளில் கொடுத்து அவன் முகத்தில் பூரித்த மகிழ்ச்சியை அவர் கொண்டாடிக் கொண்டிருந்தார். சிரித்தபடியே மத்தாப்பால் வட்டம் போட்டுக்கொண்டிருந்த கதிர், திரும்பி தனது மாமா முகத்தைப் பார்க்க, சட்டென்று கலங்கினான். ‘சீக்கிரம் கொளுத்து இன்னும் சங்குசக்கரம் இருக்கு, பாம்பு மாத்திரை இருக்கு, புஸ்வாணம் இருக்கு..’ என்றவரை அவன் பார்த்துக்கொண்டிருக்க அவர் பேசிக்கொண்டேயிருக்கிறார்.

You might also like

Master New Stills.

Eswaran Movie new Stills

எடப்பாடியார் -கமல்ஹாசனார் மோதல் முற்றுகிறது.!

tamil-director-gowthaman_biopicகுறிப்பு:
இது கதையல்ல உண்மைச் சம்பவம்.
இதில் ’கதிரவன்’ என்று வரும் இடத்திலெல்லாம் ‘கெளதமன்’ என்றும் போட்டு வாசித்துக் கொள்ளலாம். இந்த நிகழ்வை எழுதும்போது என் கண்களில் கண்ணீர் கோர்த்துக்கொள்கிறது. இறுதிவரை நான் உயிரையே வைத்திருந்த எனது பாண்டு மாமா கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் என் பெயரை உச்சரித்துக்கொண்டே தனது கடைசி மூச்சினை முடித்துக்கொண்டார்.
ஒவ்வொரு தீபாவளி அன்றும் எப்பவோ சொன்ன பாண்டுமாமாவின் குரல் மட்டும் எனக்குக் கேட்டுக்கொண்டே இருக்கும். ‘தாய் மாமங்கிறவன் தாய்க்குச் சமமானவண்டா நீ நல்லாப் படிச்சு பெரிய ஆளாயி என்னப் பாத்துக்கிறியோ? இல்லியோ? ஒங்கம்மாவை பாத்துக்கணும்.’
நீ சொன்ன மாதிரியே அம்மாவை பத்திரமா பாத்துக்கிட்டன் மாமா. ஆனா… ஆனா… இந்த தீபாவளிக்கு அம்மாவும் இல்லாம போயிட்டாங்க. யாருமே இல்லாததனால வீட்டுக்கு முன்னாடியும் பின்னாடியும் செடி, கொடியெல்லாம் மொளச்சி பொதர் மண்டிக்கெடக்குது மாமா. அம்மா இல்லாத வீட்ட எப்படி பாக்கறதுன்னு இந்த வருஷம் தீபாவளிக்கு ஊருக்குப் போகலாமா? வேண்டாமான்னு ஒரே கொழப்பமா இருக்கு. எனக்கு பொறந்த பொண்ணுக்கு பரஞ்ஜோதின்னு அம்மா பேருதான் வச்சிருக்கன் மாமா. ஜோதி… ஜோதின்னு நான் கூப்படறப்பயெல்லாம் அம்மாவே திரும்பி பாக்கரமாதிரி இருக்கு. ஒவ்வொரு நாளும் அம்மா சிந்தின கண்ணீருக்குப் பதிலா பேரு வச்சதத்தவிர வேற என்ன மாமா நான் கைமாறு செஞ்சிரமுடியும்?

Previous Post

சிங்கம் 3- சி ‘3’ யாக மாறியது!

Next Post

மிரட்ட வரும் ‘மோ ‘பேய்!

admin

admin

Related Posts

Master New Stills.
stills

Master New Stills.

by admin
January 13, 2021
Eswaran  Movie new Stills
stills

Eswaran Movie new Stills

by admin
January 13, 2021
எடப்பாடியார் -கமல்ஹாசனார் மோதல் முற்றுகிறது.!
stills

எடப்பாடியார் -கமல்ஹாசனார் மோதல் முற்றுகிறது.!

by admin
December 18, 2020
ரஜினிகாந்த் கொண்டாடிய தீபாவளி! ‘பட்டாசு’ வெடித்தார்!!
News

ரஜினிகாந்த் கொண்டாடிய தீபாவளி! ‘பட்டாசு’ வெடித்தார்!!

by admin
November 15, 2020
காஜல் அகர்வால் -கவுதம் கிட்சுலு திருமண புகைப்படங்கள்.
stills

காஜல் அகர்வால் -கவுதம் கிட்சுலு திருமண புகைப்படங்கள்.

by admin
October 31, 2020
Next Post
மிரட்ட வரும் ‘மோ ‘பேய்!

மிரட்ட வரும் 'மோ 'பேய்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

கேப்டன் டி.வி., பி.ஆர்.ஓ .ஆனந்த் திருமணவிழா.

கேப்டன் டி.வி., பி.ஆர்.ஓ .ஆனந்த் திருமணவிழா.

February 24, 2021
சமூக பிரச்னைகளை சொல்லவருகிறது ‘மாயமுகி ‘!!

சமூக பிரச்னைகளை சொல்லவருகிறது ‘மாயமுகி ‘!!

February 24, 2021
தாய்மைக்கு பிறகு கூடும் எடையை குறைப்பது எப்படி? நடிகை ஈஷா தியோல் கூறும் வழி !

தாய்மைக்கு பிறகு கூடும் எடையை குறைப்பது எப்படி? நடிகை ஈஷா தியோல் கூறும் வழி !

February 24, 2021
காதலர் தீவில் சினிமாவின்  பிரபல காதல் ஜோடி.!

காதலர் தீவில் சினிமாவின் பிரபல காதல் ஜோடி.!

February 23, 2021

Actress

Sanchita Shetty New Photo Shoot

Sanchita Shetty New Photo Shoot

December 16, 2020
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

December 9, 2020
Raashi Khanna New Photo Shoot

Raashi Khanna New Photo Shoot

December 7, 2020
Chandini Tamilarasan New Photo Shoot

Chandini Tamilarasan New Photo Shoot

December 7, 2020
Actress Indhuja Photoshoot Stills

Actress Indhuja Photoshoot Stills

August 15, 2020

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani