‘பாலிவுட் கிங்கான்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கதாநாயகியாக களமிறங்கிய நடிகை நயன்தாராவுக்கு , அப்படத்துக்கு கிடைத்த பெ ரும் வரவேற்பு காரணமாக பாலிவுட்பட வாய்ப்புகள் இவரை தேடி வருகிறதாம்
பாலிவுட்டில் பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், ஆலியா பட் ஆகிய இருவரும் நடிக்கும், ‘பைஜூ பவ்ரா’ எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாராவை நடிக்க வைக்க தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்கிறார்கள் .
இப்படம் இந்தியில் கடந்த 1952-ம் ஆண்டு வெளியான ‘பைஜு பாவ்ரா’ என்ற படத்தின் ‘ரீமேக்’ ஆக உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. சஞ்சய் லீலா பன்சாலி இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற தேவதாஸ், சாவரியா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், கங்குபாய் கதியவாடி உட்பட பல படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.