இளையராஜாவின் மகளான பவதாரிணி ராசய்யா படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அவர் இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, தேவா என்று பலரது இசையில் பவதாரிணி பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். நடிகை ரேவதி இயக்கிய மித்ர் மை பிரண்ட் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.இளையராஜா இசையில் பாரதி படத்தில் வரும் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்காகத் தேசிய விருதும் கிடைத்தது.கடந்த சில ஆண்டுகளாக பவதாரிணி கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் ஏற்கனவே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த 5 மாதங்களாக இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில்,, திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஜனவரி 25ஆம் தேதி மாலை மரணமடைந்தார்.அவரது மரணத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், இயக்குனர் பாரதிராஜா, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும், பவதாரிணி உடல் இலங்கையில் இருந்து தமிழ்நாடு எடுத்து வர அவசர நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அதன்படி நேற்று பிற்பகல் பவதாரிணி உடல் சென்னைக்கு எடுத்து வரப்பட்டு,தி நகரில் இருக்கும் இளையராஜா வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே உறவினர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என்று பலரும் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் பவதாரிணி உடல் இளையராஜாவின் சொந்த மாவட்டமான தேனிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்ட அவரது உடல் இளையராஜா பங்களா இருக்கும் லோயர்கேம்பிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது. கிராமத்தினர் பலரும் பவதாரணியின் உடலுக்கு இறுதிஅஞ்சலி செலுத்தினர்
இளையராஜாவின் சொந்த ஊர் பண்ணைபுரம். இருப்பினும், அவரது தாய் சின்னத்தாய், அவரது மனைவி ஜீவா ஆகியோரின் நினைவிடம், இளையராஜாவுக்கு சொந்தமான லோயர்கேம்ப் பங்களா என்ற தோட்டத்தில் தான் உள்ளது.அவரது தாய் மற்றும் மனைவியின் நினைவுநாள் உள்ளிட்ட நாட்களில் இளையராஜா அங்குச் சென்று தியானம் செய்வார். இதற்கிடையே பவதாரிணி உடலுக்கு இன்று காலை காலை 10 மணிஅளவில் இறுதிச்சடங்கு நடந்தது. தொடர்ந்து பவதாரிணி தாய் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே பவதாரிணி உடல் இன்று மதியம் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பவதாரிணி ராசய்யா என்ற படத்தின் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். அவர் இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, தேவா என்று பலரது இசையில் பவதாரிணி பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார். நடிகை ரேவதி இயக்கிய மித்ர் மை பிரண்ட் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.இளையராஜா இசையில் பாரதி படத்தில் வரும் மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்காகத் தேசிய விருதும் கிடைத்தது.