நடந்தது திருமணம் இல்லை, நிச்சயதார்த்தம் மட்டுமே! சித்தார்த்-அதிதிராவ் அறிவிப்பு!!
தெலங்கானாவின் வனபர்த்தி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கநாயக சுவாமி கோயிலில் நேற்று காலை சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை சில தெலுங்கு ஊடகங்களும் உறுதிப்படுத்தின. ஆனால் இது குறித்து சித்தார்த் மற்றும் அதிதி ராவ் இருவரும் வாய் திறக்க வில்லை.
இந்நிலையில், இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ள வில்லை. நடந்தது நிச்சயதார்த்தம் மட்டுமே என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.விரைவில் திருமண தேதி குறித்து இருவரும் அறிவிப்பு வெளியிட உள்ளனராம்.இப்பதிவை பார்த்த நடிகைகள் ராஷி கன்னா, குஷ்பு, அபர்ணா தாஸ், மஞ்சிமா மோகன், நிவேதிதா சதீஷ், சம்யுக்தா ஹெக்டே, கிஷன் தாஸ், திவ்யா சத்யராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.