சிவகார்த்திகேயன் படத்தில் சீமான்!


அமரன் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘எஸ்.கே. 23’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இப்படத்தை நடிகர் விஜயின் கோட் படத்தை இயக்கி வரும் வெங்கட்பிரபு இயக்கவுள்ளார் என்கிறார்கள்.இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் நடிகரும் இயக்குனருமான   சீமான் நடிக்க உள்ளதாகவும், இது குறித்து தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.