அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் அமரன்!
அயலான் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் இப்படத்தை கமல் ஹாசன் தயாரித்துள்ளார் முன்னாள் இந்திய இராணுவ வீரர் முகுந்த் வரத்ராஜனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து ஆக்சன் படமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இதன் காரணமாக சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இந்தப் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் அமரன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வருட தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 31ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.