‘அம்மா’ தலைவர் மோகன்லால் ‘திடீர்’ விலகல்! -செயற்குழு உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா!!

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது . கடந்த 2017ம் ஆண்டில் காரில் நடிகை ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க ஹேமா என்ற நீதிபதி தலைமையிலான மூவர் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டனர்.இதையடுத்து   கடந்த 2019ம் ஆண்டிலேயே இதன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது தான் இந்த அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த அறிக்கை கேரளாவில் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து இயக்குநர் பிளெஸ்ஸி, தீபா தாமஸ்,டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலரும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்..இந்நிலையில், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார். அவருடன் மற்ற செயற்குழு உறுப்பினர்களும் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .மலையாள நடிகர்கள் சங்கத்தில் நிகழ்ந்த இந்த ‘கூண்டோடு’ ராஜினாமா முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ஹேமா கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.