கேரள திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள், பாலின பாகுபாடுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.இந்த கமிட்டி சமர்ப்பித்த அறிக்கையில்
பட வாய்ப்புகளுக்காக பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், பெரிய நடிகர்கள் கூட இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த அறிக்கை வெளியான பின், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நடிகையர்,சிலர் தாங்கள் அனுபவித்த கொடுமைகளை வெளிப்படையாக கூற தொடங்கியுள்ளனர்.பிரபல மலையாள நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூ., – எம்.எல்.ஏ.,வுமான முகேஷ், நடிகர்கள் ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, சித்திக், இயக்குனர் ரஞ்சித் ஆகியோர் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளன.ஹேமா கமிட்டியின் அறிக்கை குறித்து விசாரிக்க, குற்றப்பிரிவு ஏடிஜிபி ஹெச் . வெங்கடேஷ் தலைமையிலான இக்குழுவில் டிஐஜி. அஜிதா பேகம், குற்றப்பிரிவு தலைமையக எஸ். பி. மெரின் ஜோசப், கடலோர போலீஸ் ஏஐஜி, பூங்குழலி, கேரளா போலீஸ் அகாடமி உதவி இயக்குனர் ஐஸ்வர்யா டோங்ரே, ஏ ஐ ஜி அஜித் வி மற்றும் குற்றப்பிரிவு எஸ்பி. எஸ். மதுசூதன் ஏழு பேர் அடங்கிய சிறப்பு விசாரணை குழுவை, கேரள அரசு அமைத்துள்ளது . இந்த குழுவினர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நடிகர்கள் சித்திக் ஜெயசூர்யா முகேஷ் மணியன் பிள்ளை ராஜு மற்றும் எட வேல பாபு, தயாரிப்பாளர் ரஞ்சித் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது. இதையடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. நடிகைகளின் பாலியல் புகார்களால் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பாக புகார் அளித்த மலையாள நடிகைகளிடம் ரகசிய வாக்குமூலம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட நடிகைகள், நண்பர்களிடம் பேசிய உரையாடல் பதிவுகளை சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் உள்ளிட்ட தகவல்களை சேகரித்து விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு திட்டமிடப்பட்டுள்ளது. பாலியல் புகார்கள் விஸ்வரூபம் எடுத்த நிலையில், நடிகர் மோகன்லால் தலைவர் பதவியில் இருந்து விலகியதையடுத்து, மலையாள திரைப்பட நடிகர் சங்கம் (அம்மா)நேற்று கூண்டோடு கலைக்கப்பட்டது.இந்நிலையில், கடந்த 2016-ல் மஸ்கட் ஓட்டலில் நடந்த பலாத்கார சம்பவம் தொடர்பாக ரேவதி சம்பத் அளித்த புகாரின் பேரில் 8 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சித்திக் மீது,திருவனந்தபுரம் மியூசியம் போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு மற்றும் ரேவதி சம்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த பிரிவிலும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் நடிகை மினு முனீர் நடிகர் முகேஷ் மீது அளித்துள்ள பாலியல் குற்றச்சாட்டின் படி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.