BTG நிறுவனத்துடன், கைகோர்த்த ஜெயம் ரவி !

டேட்டா பிரைவசி ஸ்பேஸ், சைபர் தடயவியல் உட்பட மென்பொருள் துறையில் உலகளாவிய அளவில் கோலோச்சும் பாபி பாலச்சந்திரன் தனது பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் மூலம் தமிழ் திரைத்துறையில் கால் பதித்துள்ளார்.முன்னதாக இந்நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், அருள்நிதி நடிப்பில் வெளியான “டிமான்ட்டி காலனி 2” நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக இயக்குநர் விக்ரம் ராஜேஸ்வர் இயக்கத்தில்,வைபவ் மற்றும் அதுல்யா நடிப்பில், காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள “சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்” வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

மேலும் ,இந்நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக அருண் விஜய் நடிப்பில், ‘மான் கராத்தே’ இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ”ரெட்டதல” படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் அடுத்ததாக ஜெயம்ரவி நடிப்பில், 2 பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களை உருவாக்கவுள்ளது.ஜெயம் ரவி நடிக்க உள்ள புதிய படங்களின் இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படங்களின் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்க இருக்கும் அடுத்த 2 படங்கள் குறித்த அறிவிப்பு தற்போது வீடியோவுடன் வெளியாகி, இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.அந்த வீடியோவில்’இருட்டை விரட்டுவதற்கு சூரியன் தேவையில்லை, ஒரே ஒரு தீக்குச்சி போதும்” என்ற ஜெயம்ரவியின் வசனத்துடன் அவர் நடித்துள்ள சில படங்களின் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. “ரெமோ” மற்றும் “சுல்தான்” படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் ஒரு படத்தையும், இன்னொரு படத்தை ஷங்கரின் உதவியாளர் அருள் சக்தி முருகன் இன்னொரு படத்தையம் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன