
இலக்கணம் மாறுவதில்லை. ரவுடிகளின் முடிவிலும் மாற்றமில்லை என்பதை சொல்லியிருக்கிறார்கள். பத்தோடு இதுவும் ஒன்று என்றில்லாமல் சற்று வேறுபட்டு சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். வரவேற்கலாம்.
ரவுடிகள் சண்டியர்களின் வாழ்க்கை பெரும்பாலும் குருதி படிந்துதான் இருக்கும்.அவர்களுக்கு அதுவே அங்கீகாரம் . எப்படி கடக்கிறார்கள் வாழ்க்கையை என்பதை சொல்லியிருக்கிற படம்தான் ‘ப்ரைடே’இதே தலைப்பில் சில படங்கள் வந்திருக்கின்றன. மாற்றி யோசித்திருக்கலாம்.
மைம் கோபியின் டிரேட் மார்க் என்றாகிவிட்டது தாதா கேரக்டர். இவரது கோஷ்டியில் இருக்கிறார் அனிஷ் மாசிலாமணி..தன்னைப்போல தம்பியும் அரிவாள் நாயகனாக மாறிவிடக்கூடாது என்பது ஆசை. அது நடந்ததா ,என்னவாயிற்று என்பதை வெட்டு குத்து ரத்தம் கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
அனிஷ் உருவத்தில் ரவுடியாக தன்னை மாற்றிக்கொண்டிருந்தாலும் அன்பும் அரவணைப்பும் இணைந்த கலவையாக இருக்கிறார்.கேரக்டர் அப்படி. சிறப்பாகவே செய்திருக்கிறார் .
அண்ணன் மைம் கோபியை பல படங்களில் தாதாவாக எப்படி பார்த்தோமோ அதே..அதே இதிலும்.!
விஜய் டி வி தீனாவுக்கு ஐந்தாம் படை கேரக்டர். திருப்பம் தரக்கூடிய கேரக்டர், ஒல்லியானாலும் கில்லியாக நடித்திருக்கிறார்.
பெரும்பாலும் அறிமுக நடிகர்களாக இருக்கிறார்கள். ஆர்வமுடன் நடித்திருக்கிறார்கள் கலையரசன், சித்து குமரேசன் ,ராமச்சந்திர துரைராஜ், ஆகியோரை குறிப்பிட்டு சொல்லலாம்.
ஒளிப்பதிவாளர் ஜானி நாஷ்,கடுமையான உழைப்பு காட்சிகளில் தெரிகிறது.
டுமே. இதுவரை கேள்விப்படாத பெயராக இருக்கிறது. இசை அமைப்பாளர். பாடல்கள் எதுவும் மில்லை பின்னணி இசை மட்டும்தான்.!
கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஹரி வெங்கடேஷ்.வந்து போன படங்களின் சாயல் இருக்ககூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்திருக்கிறார். ஏனென்றால் களம் அப்படி,!தொய்வில்லாமல் படம் செல்வதே அவரது வெற்றி.












